திருச்செந்தூர் அருகே நேற்று முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், முதல்வர் கருணாநிதி துணைவி ராஜாத்தி கலந்து கொண்டார். அவரது தலையில் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஆறுமுகநேரி, முத்துகிருஷ்ணாபுரத்திலுள்ள முத்தாரம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை துவங்கியது. பின், கும்ப கலச பூஜை நடத்தப்பட்டு, காலை 9.30 மணிக்கு ராஜகோபுர விமான கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மற்ற தெய்வங்களின் விமான கலசங்களுக்கும் அபிஷேகம் நடந்தது.
இதில், ராஜாத்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை, அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர்கள் ஜெயராமன், சுப்பிரமணியன், தூத்துக்குடி எம்.பி., ஜெயதுரை, திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தனிமேடையில் அமர்ந்து கும்பாபிஷேகத்தை பார்த்தனர்.
கும்பத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீர், ராஜாத்தி, மற்றுமுள்ளவர் மீது தெளிக்கப்பட்டது. பின், கோவிலில் முத்தாரம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிலும், ராஜாத்தி கலந்து கொண்டார். மொத்தம், 40 நிமிடம் அவர் கோயிலில் இருந்தார்.
கெடுபிடி இல்லை: நேற்று முன்தினம் அவர் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றபோது, அவரை படமெடுக்க முயன்ற பத்திரிகையாளர்கள், தி.மு.க.,வினரால் மிரட்டப்பட்டனர். ஆனால், நேற்று கெடுபிடி எதுவுமில்லை. நேற்று முன்தினம் இரவு, ராஜாத்தி, குரும்பூர் அருகே, புன்னை நகரிலுள்ள வனதிருப்பதி பெருமாள் கோவில், அதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோவில் ஏகாந்த சேவையில் சுவாமி தரிசனம் செய்தார்.
Karunanidhi and family are fooling people . They are NOT ATHEISTS ,but believers.
ReplyDeleteLet not people be fooled again and again !!!