மகனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, நடிகை வனிதா சாலை மறியலில் ஈடுபட்டதால் நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை வனிதாவிற்கும், அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையில் குழந்தை விஜய் ஸ்ரீஹரி யாரிடம் வளர்வது என்பது தொடர்பான வழக்கு கோர்ட்டில், வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், குழந்தையை ஆறு மணி நேரம் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க, நுங்கம்பாக்கம் கோத்தாரி ரோட்டில் உள்ள வனிதாவின் வீட்டிற்கு தனது ஜீப்பில் அழைத்து வந்தார்.
அப்போது, வனிதாவிடம் செல்ல மகன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மீண்டும் வீட்டிற்கு திரும்ப ஆகாஷ் எத்தணித்த போது, ஜீப்பின் முன் வந்த வனிதா, செல்லவிடாமல் மறியல் செய்தார். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார், மூவரையும் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது, வனிதா தொடர்ந்து போலீஸ் நிலையம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ டிரைவருக்கு அடி: வனிதா போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, திருமுருகன் என்ற ஆட்டோ டிரைவரை, நுங்கம்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, டிரைவர் மறுக்க, லத்தியால் தாக்கியுள்ளார். இதில், திருமுருகனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்டோ டிரைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுப்பதாக
அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
வனிதாவுக்கு முன்ஜாமீன்: வக்கீலை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை வனிதாவுக்கு சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. மகன் விஜய் ஸ்ரீஹரி யார் வசம் இருப்பது என்பது குறித்து நடிகை வனிதாவுக்கும், அவரது முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் இடையே, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது. ஐகோர்ட்டுக்கு கடந்த 18ம் தேதி நடிகை வனிதா, அவரது கணவர் ஆனந்தராஜன் வந்திருந்தனர். முன்னாள் கணவர் ஆகாஷ் வந்திருந்தார்.
விசாரணை முடிந்து கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது தன்னை கீழே தள்ளி மிரட்டல் விடுத்ததாக, ஐகோர்ட் போலீஸ் நிலையத்தில் வனிதா, ஆனந்தராஜன், அவர்களது நண்பர் ஜாகிர் உசைனுக்கு எதிராக வக்கீல் சசிகுமார் புகார் கொடுத்தார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் வனிதா உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்தனர். முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, வக்கீல் சசிகுமார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுக்களை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்தார். மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தினசரி ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் இரண்டு வாரங்களுக்கு ஆஜராக வேண்டும் என, நீதிபதி நிபந்தனை விதித்தார்.
No comments:
Post a Comment