'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தின் மூலம் கிடைத்த பாராட்டுக்களை காட்டிலும், 'முத்துக்கு முத்தாக' படத்தின் மூலம் ஏகப்பட்ட பாராடுக்கள் கிடைத்து வருகிறதாம் சரண்யா பொன்வண்ணனுக்கு. இப்படத்தில் ஐந்து மகன்களுக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யாவின் நடிப்பை பார்த்து "இவங்க ஒரு பொம்பல சிவாஜி" என்று புகழ்ந்து விட்டார்கள்.
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், பெரிய நடிகர்களிடம் போகாமல் கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிகர்களை வைத்து மறுபடியும் உறவுகளின் உணர்வுகளை இப்படத்தின் மூலம் படமாக்கியிருக்கிறார் ராசுமதுரவன்.
"நாங்க இந்த படப்பிடிப்புல உண்மையாகவே உறவுகளைபோலத்தான் பழகினோம்" என்று வார்த்தைகளால் சொல்வதோடு நிறுத்திகொள்ளாமல், இன்று நடைபெற்ற 'முத்துக்கு முத்தாக' இசை வெளியீட்டு விழாவிலும் அதை நிறுபித்து விட்டார்கள் இப்படக்குழுவினர். மேடை ஃபார்மாலிட்டியெல்லாம் மூட்டை கட்டி விட்டு, இவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஏதோ கிராமத்து ஒரு குடும்ப நிகழ்ச்சியில் இருந்ததைப் போல இருந்தது.
"நான் நடிக்கிற படங்களில் ஆம்பள பிள்ளைகளுக்குத்தான் அம்மாவாக நடிக்கிறேன். ஆனால் நிஜத்தில எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்க. இந்த படத்திலையும் ஐந்து ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அதே போல நான் நடிக்குற படங்களில் நான் பேசும் கிராமத்து பாஷயை அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த பாராடுக்கள் அப்படத்தின் இயக்குநர்களையே சாரும், காரணம் நான் சென்னையில் வளர்ந்தவள். என்னை இதுபோன்ற ஒரு கிராமத்து அம்மாவாக மாற்றிய பெருமையேல்லாம் இயக்குநர்களுக்குத்தான்" என்று பேசினார் சரண்யா.
இந்த படத்துல இவருக்கு ஜோடியாக, அதாவது இவருடைய கணவராக நடித்திருப்பவர் இளவரசு. "இதுவரை சின்ன சின்ன கேரக்டர்ல நடித்திருந்த எனக்கு இது மிகப்பெரிய கேரக்டரா இருக்கும். இத முதல்ல நாசர் சார்தான் நடிக்கறதா இருந்தது. இந்த கேரக்டர பத்தி ராசுமதுரவன் என் கிட்ட சொன்னவுடனே, நாசர் சார்தான் எவ்வளவோ நடிச்சிட்டாரு, நாம எப்போது இதுபோன்ற கேரக்டர்லலாம் நடிக்கறது என்று எனக்கு தோனுச்சு, அப்படியே நான் அதை ராசுமதுரவன் கிட்ட சொன்னேன். அவரும் என் மேல நம்பிக்கை வச்சு இந்த கேரக்டர எனக்கு கொடுத்துட்டாரு" என்று தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் இளவரசு.
அத்தனை பேரும் தங்களின் மகிழ்ச்சியை பகுர்ந்துகொள்ள, இறுதியாக பேசிய ராசுமதுரவன், "இன்றைக்கு என் அப்பா இல்ல, இறந்துட்டாறு. இந்த படத்துல இளவரசுவ பார்க்கும்போது என்னோட அப்பாவ பார்த்தது போல இருந்தது" என்று கூறி கண்ணீரால் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

No comments:
Post a Comment