கொழும்பு சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததற்காக தற்போது அந்த விருதுக் கமிட்டியினரால் நீக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தந்தி அனுப்ப சீமானின் நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆண்டு கொழும்பு நகரில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கலந்துகொள்ள மறுத்த மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் துணிச்சலான முடிவை தமிழினம் பாராட்டியது.
அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ, அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் நாளை தந்தி கொடுக்க உள்ளனர் என்று அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment