படம் ஓடுகிறதோ, இல்லையோ சம்பளத்தை ஏற்றுவதை நிறுத்துவதே இல்லை ஹீரோக்கள். ஒவ்வொரு படம் நஷ்டம் அடையும் போதெல்லாம் தன் சம்பளத்தை மட்டும் ஏற்றிக் கொண்டே இருக்கிறார் என்று முன்னணி நடிகர் ஒருவரை பற்றி மேடையிலேயே புலம்பி தள்ளினார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
இப்படி தயாரிப்பாளர்களை புலம்ப வைக்கிற லிஸ்ட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். ஆடுகளம் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தில் இரண்டு கோடியை ஏற்றிவிட்டாராம். விளைவு? கோடம்பாக்கத்தில் ஒரே குமுறல் சப்தம்!
சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த உத்தம புத்திரன் வெற்றிப்பட லிஸ்டில் இல்லை. ஆடுகளம் படத்தின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பார்த்தால்தான் இந்த படத்தை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்ற முடிவுக்கே வர முடியும். உண்மை இப்படியிருக்க தனுஷின் இந்த திடீர் முடிவு திரையுலகத்தை திகைக்க வைத்திருக்கிறது.
இதற்கிடையில் ஆடு களத்தை ரிலீஸ் செய்து விட்டு “மாப்பிள்ளை” படத்தில் முழு வீச்சில் நடிக்கிறார் தனுஷ்.
இது 1989-ல் ரிலீசான ரஜினி படத்தின் ரீமேக். ஹன்சிகா மோட்வானி ஜோடியாக நடிக்கிறார். சுராஜ் இயக்குகிறார்.
No comments:
Post a Comment