காலத்தால் அழியாத பாடல்கள் பல தந்த கண்ணதாசனின் பேரனும், இயக்குநர் கலைவாணன் அவர்களின் மகனுமான, ஆதவ் கண்ணதாசன், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
புதுமுக இயக்குநர் ஏ.சி.துரை இயக்கத்தில், ஆதவ், காயத்ரி நடிப்பில் புதிய படத்திற்கு "பொன்மாலைப் பொழுது" என்ற தலைப்பை வைத்துள்ளனர். தலைப்பு பற்றி ஆதவிடம் கேட்டதற்கு பொருத்தமான தலைப்பாக இருந்ததால் "பொன்மாலைப் பொழுது" என்று வைத்துள்ளோம். நல்ல செய்தி எதுவாக இருந்தாலும் பயன்படுத்துவதில் தப்பு இல்லை என்கிறார். மேலும் எல்லாரும் ஏன் தாத்தா மாதிரி பாடலாசிரியர் ஆகவில்லை என்று கேட்கின்றனர். அவர் நிறைய சாதித்துவிட்டார், இனி என்னால் அது சாத்தியமில்லை. எனவே நான் நடிகனாக களமிறங்கி விட்டேன், வெற்றி பெற எவ்வளவு உழைக்க வேண்டுமானால் தயார் என்கிறார். இவர் முன்னரே இயக்குநர்களிடம் உதவியாளராகவும், சண்டைப் பயிற்சி, கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சியும் பெற்று வந்திருக்கிறார்.
கண்ணதாசனின் பேரன் என்ற கூடுதல் அட்ராக்ஷனோடு வந்திருக்கும் இந்த இளம் ஹீரோவுக்கு உயரமும் முக லட்சணமும் இன்னும் சில அட்ராக்ஷன்கள் . தாத்தா எழுதிய பாடல்களில் உங்களுக்கு பிடித்தது" என்ற அளவோடு நிறுத்தினோம். 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' என்றார் ஆதவ். (ஒரு கோலமயில் இவர் துணையிருப்பா என்பதை வரப்போகும் கிசுகிசுக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!)
ஆதவ். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறாராம். புது ஹீரோவை வாழ்த்த வந்திருந்தார் குருநாதர் முருகதாஸ். "கண்ணதாசன் பேரன் என்ற அடையாளம் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் உதவலாம். யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால் இந்த விசிட்டிங் கார்டு சட்டென்று கதவை திறந்துவிடும். ஆனால் அதன் பின் வெற்றி பெறுவதெல்லாம் அவரது தனிப்பட்ட திறமையை வைத்துதான்" என்றார் முருகதாஸ்.
ஏ.சி.துரை இயக்கப்போகும் பொன்மாலைப் பொழுதில் காயத்ரி என்ற புதுமுகமும் நடிக்கிறார். நிஜம்மா அவங்க பேரை சாவித்ரின்னு வச்சுருக்கணும். அந்தளவுக்கு நடிப்புல பின்னி எடுக்கிறாங்க என்றார் துரை. அத்தனை பேரும் அளவோடு பேசியதுதான் இந்த படத்தின் மீது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
ஏனென்றால் ஸ்பீக்கர் கிழிய பேசுன ஆளுங்க படத்தையெல்லாம்தான் ஏற்கனவே பார்த்துட்டமே!
No comments:
Post a Comment