தங்கள் படங்களை ஒரேநேரத்தில் இந்தியிலும் வெளியிட தமிழ் நடிகர்கள் சிலர் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.
தமிழில் ஒரு படம் நல்ல வரவேற்பைப் பெற்றால் அப்படத்தின் கதையை வாங்கி, இந்தியில் ரீமேக் செய்யத் தவறுவதில்லை.
அந்த வகையில், சமீபத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சிங்கம் திரைப்படம் இவ்வருடம் இந்தியில் வெளிவர இருக்கிறது.
2010ம் ஆண்டில் இந்தியில் சூர்யா, 'ரத்த சரித்திரம்' மூலமும், விக்ரம் 'ராவணன்' மூலமும் இந்தியில் அறிமுகம் ஆகினர். ஏற்கனவே மாதவன் இந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். ரஜினி நடித்த எந்திரன் திரைப்படமும் ரோபோவாக வெளியானது.
இவர்களுக்கு கிடைத்த வரவேற்பினால், இப்பொழுது தமிழ் நடிகர்கள் பலரும் தங்கள் படங்களையும் இந்தியிலும் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட தொடங்கி உள்ளது.
சிம்பு தனது வேட்டை மன்னன் படத்தின் மூலம் இந்தி திரையுலகுக்கு அறிமுகமாக உள்ளார். சரத்குமாரும் தமிழ், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரு படம் பண்ண ஆர்வம் காட்டி வருவதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஒரு புறம் இவர்கள் முனைப்பு காட்டினாலும் விஜய், அஜீத் மற்றும் கமல் ஆகியோர் தங்களுக்கு தமிழ் ரசிகர்களே போதும் என்கின்ற நிலையில் அவர்களது படம் தமிழில் மட்டும் வெளியாகி வருகிறது.
No comments:
Post a Comment