இனி எனக்கு ஜோடி தேவையில்லை!
நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ், சனா கான் நடித்துள்ள படம் ‘பயணம்' பிப்ரவரி 4ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் நாகார்ஜுனாவிற்கு ஜோடி இல்லையாம். இது பற்றி அவரிடம் கேட்ட போது, '‘பயணம்' படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கும் காலத்தை கடந்துவிட்டேன். இப்போது கதைக்குத்தான் முக்கியத்துவம் தருகிறேன்' என்கிறார் நாகார்ஜுனா

. தனுஷ் செய்த ஜாங்கிரி
தனுஷ் கவுரவ வேடத்தில் தோன்றும் படம் ‘சீடன்’. மலையாளத்தில் ரிலீஸான ‘நந்தனம்’ ரீமேக்கான இதை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது. ‘‘கவுரவ வேடத்தில் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் சிவபெருமானின் தீவிர பக்தன். ‘சீடன்’ படத்தில் சிவன் வேடம் ஏற்க வேண்டும் என்று சுப்ரமணியம் சிவா சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன்’’ என்றார் தனுஷ். மேலும் ‘சீடன்‘ படத்தில் தனுஷ் சமையல்காரராக கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஷூட்டிங்கில் அவரே செய்த ஜாங்கிரியை படக்குழுவினர் ருசித்து சாப்பிட்டார்களாம்.

காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது
‘பொன்மாலைப் பொழுது' பட இயக்குனர் ஏ.சி.துரை கூறியது: கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் ஹீரோவாக அறிமுகம் படம் இது. ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். 'வாங்க காதலில் விழுங்கள்' என்று இப்படத்திற்கு துணை தலைப்பு தந்திருக்கிறேன். ஏன் அப்படி தலைப்பு வைத்தேன் என்பதற்கு படத்தில் விடை இருக்கும். பிளஸ் 2 படிக்கும் டீன் ஏஜ் மாணவர்களின் காதலை சொல்லும் கதை. இது ஜாதியை மையமாக கொண்டதா என்கிறார்கள். ஜாதி, மதம் வைத்து நிறைய காதல் கதைகள் வந்துவிட்டன. மீண்டும் மீண்டும் அதையே படமாக்குவது மக்களின் மனதை அதே பாதைக்கு கொண்டு செல்வதுபோல்தான் ஆகிறது. இயக்குனர்கள் ஜாதி, மதத்தை கடந்து வந்தால்தான் மக்களும் அதை கடப்பார்கள். இப்படத்தில் காதலை புதிய களத்தில் சொல்கிறேன். ஒரு மகன் இப்படத்தை பார்த்தால் தந்தையையும் பார்க்கச் சொல்வான். அதேபோல் தந்தை பார்த்தால் மகனை போய் பார்க்க வலியுறுத்துவார். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பிப்ரவரியில் தொடங்குகிறது.

No comments:
Post a Comment