நீண்ட இடைவெளிக்குப்பிறகு `பயணம்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் நாகர்ஜுனா. அவர் கூறியதாவது:-
ராதாமோகனின் `அபியும் நானும்' பார்த்தேன். அந்தப் படம் சொல்லிக் கொடுத்த அன்பு எனக்கு பிடிச்சிருந்தது. வியாபாரத்திற்காக காம்ப்ர மைஸ் பண்ணாத ராதா மோகனின் நேர்மை பிடிச்சிருந்தது. `பயணம்' எனக்கே எனக்கான கதை. உடனே ஏத்துக்கிட்டேன்.
இந்த படம் குடும்பத்தோடு போய் பார்க்கும் வகையில் அமைந்துள்ள ஓர் அழகான படம். தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களை தவறாமல் பார்த்து விடுவேன். காதல், பருத்திவீரன் ரெண்டும் என்னை பாதித்த படங்கள். சமீபத்தில் எந்திரன் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்திய சினிமாவில், ரஜினியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. ரஜினி இல்லாமல் ஷங்கரால் தனியாக எந்திரன் பண்ணி இருக்க முடியாது. ரஜினியை இனி யாரும் தாண்டிப்போக முடியாது.
இப்போ தமிழில் நிறைய நல்ல நடிகர்கள் வந்துட்டாங்க. விஜய், சூர்யா, விக்ரம்ன்னு எல்லோரும் சிறப்பாக பண்றாங்க. எப்பவும் பெண்களிடம் எனக்கு சுமூகமான உறவு இருக்கு. ஆனால், எல்லாப் பெண்களிடமும் நான் காதலோடு இருந்தேன்னு சொன்னா அது பொய். என்னிடம் அவங்க ஈஸியா பீல் பண்ணியிருக்காங்க. அது சினிமாவின் நடிக்கும் போது பதிவாகி இருக்கு. பெண்களை உணர்வுப்பூர்வமாக மதிக்கிறேன். ஆரம்ப காலங்களில் வெற்றி தந்த ஆணவத்தில் திமிரா நடத்திருக்கேன்.
ஆனால் அதற்கு பிறகு கிடைச்சது பயங்கர அடி. ஒரு படம் ஹிட்டானா, உடனே ஆகாயத்தில் மிதக்கக் கூடாது, அடுத்த ஆறு மாதத்தில் தலைகீழாக விழ வேண்டி இருக்கும். எளிமையாக இருந்தால் எந்தப்பிரச்சினையும் இல்லை. 25 வருஷமா உடம்பை டிரிம்மா மெயின்டெயின் பண்றீங்களே? அது எப்படின்னு எல்லோரும் அடிக்கடி கேட்கிறாங்க. இதில் ரகசியம் எதுவும் இல்லை. நல்லா சாப்பிடுவேன். நல்லா உடற் பயிற்சி செய்வேன். என்ன வேலை இருந்தாலும் தினமும் எட்டு மணி நேரம் தூங்குவேன்.
கவலைகளை மனதிலோ, மூளையிலோ வெச்சிக்க மாட்டேன். கோபம் வந்தாலும் அதை மூணு நிமிஷத்திற்கு மேல் தங்க விடமாட்டேன். ஆயிரம் கலோரிக்கு உணவு சாப்பிட்டால் மொத்த கலோரியையும் உடல் உழைப்பால் எரிச்சிடுவேன். தினமும் இரவு உணவை மாலை ஆறரை மணிக்கே முடிச்சிடுவேன். இதை பல வருடங்களை தொடர்ந்து செய்து வருகிறேன்.
No comments:
Post a Comment