நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.ரசிகர்களும் விஜய்யிடம் அரசியலில் ஈடுபட வற்புறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா படத்துடன் விஜய் படத்தையும் இணைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. எனவே தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து விஜய்யிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் ஒரு பயணம் இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இடமும் இருக்கிறது. அரசியலில் ஈடுபட எனக்கு இது சரியான நேரம் இல்லை. அப்படி ஒரு முடிவு எடுத்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். முக்கியஸ்தர்களை சந்தித்து பேசுவதெல்லாம் மரியாதை நிமித்தம்தான்.
அதில் அரசியல் இல்லை. நான் அரசியலுக்கு வந்தால் எனது பார்வை நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதாகவே இருக்கும். சர்ச்சைகள் ஊழல்களில் சிக்க கூடாது என்பதும் முக்கியமானதாக இருக்கும். நல்ல கதைகள் அமைந்தால் வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.
சமூகத்துக்கு கருத்துக்கள் சொல்லும் படங்களை தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது. என் வாழ்க்கையில் என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கியது எதுவெனில் கோவையில் நடந்த குழந்தைகள் கற்பழிப்பு, கொலை சம்பவம் ஆகும் அது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை உடனே தூக்கில் தொங்கவிட்டு கொல்ல வேண்டும். இவ்வாறு விஜய் கூறினார்
No comments:
Post a Comment