ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன் பகுதிநேர புகைப்பட கலைஞராக பல பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். அப்பொழுது கிடைத்த அனுபவங்களைத்தான் ஜீவா நடிக்க "கோ" படமாக உருவாக்கி வருகிறார் கே.வி.ஆனந்த்!
இதில் ஜீவாவிற்கு பத்திரிகை புகைப்பட கலைஞர் வேடம் என்பதும், கே.வி.ஆனந்த் அப்படி மீடியா புகைப்படக்காரராக இருந்தபோது நிருபர்களாக இருந்தனராம் எழுத்தாளர்கள் சுபா கூட்டாளிகள்! அவர்கள்தான் இப்படத்தின் கதை வசனகர்த்தாக்கள்! இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து சமீபமாக நடந்த மீடியா மீட்டில் இதை தெரிவித்த எழுத்தாளர் இரட்டையர்களான சு ரேஷூம் பாலாவும் மேடையில் "கோ" படத்தை வாங்கி வெளியிடும் ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினை வைத்துக்கொண்டே நாங்களும் கே.வி.ஆனந்தும் பதினைந்து வருடங்களுக்கு முன் கல்கி பத்திரிக்கைகாக ராஜபாளையம் பகுதியில் ஹை-வேஸ் சாலைவரை எல்லை தாண்டி வீடு கட்டிய ஒரு அரசியல் வாதியின் வீட்டை படம் பிடித்து செய்தி சேகரிக்க சென்றோம்! அப்பொழுது அந்த அரசியல்வாதியின் அடிப்பொடிகள் எங்களைத் துரத்திபிடித்து ஃபிலிம்ரோலையும், கேமராவையும் பிடிங்கி கொண்டு விரட்டி விட்டனர்! இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து அரசியல்வாதியின் அராஜாக புகைப்படங்கள் வீணாகிவிட்டனவே... என கவலை கொண்ட எங்களிடம் அவர்கள் துரத்தி வரும்போதே அந்த ஃபிலிம்ரோலை பத்திரமாக கழற்றி வைத்து அதில் டம்மி ரோலை பொருத்தி விட்டேன். அவர்கள் எடுத்து சென்றது வெறும் டம்மி ரோல் என சந்தோஷப்படுத்தியவர் கே.வி.ஆனந்த்!
எத்தனை சமயோஜிதமும், விழிப்புணர்ச்சியும் தேவை என்பதை உணர்த்தியவர் கே.வி.ஆனந்த்! அவர் இந்தப்படத்தை இயக்குவது அத்தனை பொருத்தமானது என்று ஆஹோ, ஓஹோ என புகழ்ந்தனர்! கடைசிவரை அந்த ராஜபாளையம் கட்சிகாரர் எந்த கட்சியை சேர்ந்தவர்? அந்த மேட்டருக்கான ரியாக்ஷன்? என்ன என்பதை சுபா இருவரும் சொல்லாத காரணத்தால் மேடையில் இருந்த உதயநிதி ஸ்டாலினும் சிரித்துக் கொண்டே இருந்தார்! ஆமாம்., எல்லை தாண்டி ஹைவேஸ் வரை வீடுகட்டிய அந்த அரசியல்வாதி எந்த கட்சியை சேர்ந்தவராம் சொல்வார்களா சுபா அல்லது கே.வி.ஆனந்த் மூவரும்...?
No comments:
Post a Comment