இலங்கையின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். அவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
பின்னர் இராணுவ நீதிமன்றம் இராணுவத்தில் இருந்த போதே அரசியலில் ஈடுபடுவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சரத் பொனசேகாவுக்கு 30 மாத கடுங்காவல் தண்டனை விதித்தது.. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இலங்கை நாட்டின் அரசமைப்புக்கு முரணாக இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டதாகவும் எனவே தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி சரத் பொன்சேகா அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.வழக்கை 5 நீதிபதிகள் கொண்டகுழு விசாரித்தது.
ராணுவ கோர்ட்டு அளித்த தீர்ப்பு அரசியல் சட்டப்படி செல்லும் என்றும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் இராணுவ நீதிமன்றங்களை நியமிப்பதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளதாக நீதிபதிகள்தெரிவித்தனர்.
No comments:
Post a Comment