பிரபல கன்னட நடிகை யமுனா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். யமுனாவை பெங்களூர் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அவருடன் மேலும் சில அழகிகளும் கைதானார்கள்.
யமுனா பற்றி ஏற்கனவே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தன. ஆந்திரா போலீசாரும் யமுனா விபசாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் பொறி வைத்து கைது செய்தனர்.
யமுனாவிடம் விசாரணை நடத்தியபோது விபசாரத்தில் ஈடுபடும் மேலும் நடிகைகள் பற்றிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.
அந்த நடிகைகளின் பெயர் பட்டியலையும் அளித்துள்ளாராம். அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தயாராகி வருகிறார்கள்.விபசாரம் நடைபெறும் ஓட்டல்கள், பண்ணை வீடுகள் பற்றிய விபரங்களையும் தெரிவித்து உள்ளாராம். அவர்களை போலீசார் கண்காணிக்கின்றனர்.
No comments:
Post a Comment