கரூரில் நடந்த ஒரு திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய வைகோ,
தமிழ் சமுதாயம் வாழ்வதற்கு ம.தி.மு.க. உழைத்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளார்கள். ஆனால் எந்த ஒரு சிங்கள பெண்ணையாவது, தமிழன் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளதா?
இலங்கை தமிழர் பகுதியில் தனியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதாவது சிங்களர்களுடன் சேர்ந்து வாழ்வதா அல்லது தனித்து வாழ்வதா என்று தனி வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்றார்.
விழாவில் ம.தி.மு.க. கொள்கை பரபரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத், ஈரோடு கணேசன் எம்.பி., கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment