இதுவரை வந்த பிறந்த நாட்கள் எப்படியோ? இந்த பிறந்தநாள் சற்று விசேஷம்தான் விஜய்யை பொருத்தவரை. ஏனென்றால் இந்த பிறந்த நாளில்தான் அதிமுக கொடியுடன் வந்திருந்த தொண்டர்களையும் அந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது. விஜய் 5 ம் வகுப்பு வரை படித்த பால லோக் பள்ளிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் தங்கள் தலைவரை வாழ்த்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க, குறிப்பிட்ட ரசிகர் படையுடன் உள்ளே நுழைந்தார் விஜய்.
பள்ளியில் படிக்கும் இளம் சிறார்கள் முன்னிலையில் தனது கண்தான விண்ணப்பத்தை நிரப்பிய விஜய், தன்னுடன் வந்திருந்த ரசிகர்களின் விண்ணபத்தையும் அங்கு வைத்தே நிர்வாகிகளிடம் வழங்க செய்தார். இந்த பருவத்திலிருக்கும் உங்களிடம் சொன்னால்தான் உங்கள் மனதில் இதுபோன்ற நல்ல விஷயங்கள் பதியும். அதனால்தான் இந்த பள்ளியை தேர்ந்தெடுத்தேன் என்றார் அவர்.
முன்னதாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றவர் அங்கு புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து வந்ததையும் மாணவர்களிடம் தெரிவித்தார். எல்லாம் நல்ல விஷயம்தான். முதல்வர் ஜெயலலிதாவே தான் போகும் இடங்களிலும், கலந்து கொள்ளும் விழாக்களிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை வற்புறுத்தி வருகிறார். ஆனால் விஜய் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியால் சாலிகிராமம் பகுதியில் இரண்டு மணி நேரம் டிராபிக் ஜாம்.
விழிபிதுங்கி போன திருவாளர் பொதுஜனம், "ஏம்ப்பா விஜய்க்கு பொறந்த நாளாம். அதுக்காக இவங்களையெல்லாம் ரோட்டை விட்டு ஓரமாக நிக்க சொல்றதுகென்ன?" என்று புலம்பிக் கொண்டே சென்றதுதான் ஷாக்.
No comments:
Post a Comment