தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் கடந்த 21.06.2011 அன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றார். அங்கு திகார் ஜெயிலில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யை சந்தித்தார். பின்னர் 22.06.2011 அன்று இரவு 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி : தாங்கள் புதிய தலைமைச் செயலகம் கட்டியதையொட்டி இன்றைய தினம் தமிழக அரசு விசாரணைக் கமிஷன் ஒன்றை நீதிபதி தங்கராஜ் அவர்களைக் கொண்டு அமைத்திருக்கிறார்களே, அதைப் பற்றி?
பதில் : எந்த அடிப்படையில் விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வந்த பிறகு சொல்கிறேன்.
கேள்வி : தி.மு.கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் எப்போது?
பதில் : ஜுலையில் தேதி இன்னும் நிச்சயமாகவில்லை.
கேள்வி : மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க.வுக்கு மேலும் வாய்ப்பு இருக்குமா?
பதில் : எனக்குத் தெரியாது.
கேள்வி : காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?
பதில் : நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் இருக்கிறது.
கேள்வி : அப்படியென்றால் பிரச்சினை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில் : எந்த பிரச்சினையும் இல்லை.
கேள்வி : டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்தித்தீர்களா?
பதில் : யாரையும் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் வயலார் ரவி அவர்கள்தான் நண்பர் என்ற முறையில் சந்தித்தார். அதிகார பூர்வமாக எந்தத் தலைவர்களையும் நானும் பார்க்கவில்லை, அவர்களும் பார்க்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment