பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் பாஸ் என்ற பாஸ்கரன் படத்திலும் நடித்துள்ளார். அதோடு, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் சென்னை சாலி கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். 01.06.2011 அன்று மாலையில், விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இந்த புகார் மனு பற்றி முதலில் போலீஸ் தரப்பில், உறுதி செய்ய மறுத்துவிட்டனர். 01.06.2011 அன்று இரவு புகார் கொடுத்தது உண்மைதான் என்று தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறினார்.
சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment