சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்,
ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது, நெல்லிக்குப்பம் தொகுதியில் கோவிந்தராஜன் 3 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கே.பி.நாகராஜன் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும். ஆளுநர் உரையில், கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் விவசாய வளர்ச்சி குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் சமூக விரோதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். விவசாயிகள் பிரச்சினை, சட்ட ஒழுங்கு பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் இருந்தது. விவசாய தொழில் லாபகரமான தொழில் இல்லை என்று கருதிய விவசாயிகள், பிழைப்பிற்காக வேலையை தேடி நகரத்திற்கு குடிபெயர்ந்தனர்.
இதனால் தமிழக சட்டமன்ற தொகுதி மறுசீரமைப்பின் போது, நகரங்களில் கூடுதலாக புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டங்களில் தொகுதிகள் குறைந்தன. தேர்தல் முடிவு வெளியானபோது மேற்குவங்காளத்தில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்று கூறினோம்.
ஆனால் தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு முன்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என பல்வேறு மூத்த தலைவர்கள் கூறி வந்தனர். காமெடி நடிகர் வடிவேலு, தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறினார். காமெடியில் அடிவாங்கும் வடிவேல், அந்த கூட்டணியில் சேர்ந்ததால் மீண்டும் அடிவாங்கியுள்ளார் என்றார்.
No comments:
Post a Comment