தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாறு அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்தனர்.
பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது.
பெங்களூரில் பழைய இரும்பு கடை நடத்தி வந்த திருப்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த லூர்துமேரி என்ற பெண் போன்மூலம் அறிமுகமானதாக தெரிகிறது. இவர்கள் போன் மூலமாகவே பேசி நட்பை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் போன் மூலம் பழக்கமான லூர்துமேரியை அண்மையில் திருப்பதி நேரில் சந்தித்ததாக தெரிகிறது.
அப்போது லூர்துமேரி 60 வயது மூதாட்டி என தெரிய வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட திருப்பதி ஒகேனக்கல் சின்னாற்றின் அருகே தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவு ரைகள் கூறினார்கள். பின்னர் குடும்பத்தாருடன் அவரை அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment