கர்நாடக சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு எதிர் ஓட்டு கூட வாங்காமல் வெற்றி பெற்றார் முதல்வர் எதியூரப்பா.
இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை காங்கிரஸ் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. சுயேச்சைகளும் கலந்து கொள்ளவில்லை, மதச்சார்பற்ற ஜனதாதளமும் கலந்து கொள்ளவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசுக்கு ஆதரவாக 119 ஓட்டுக்கள் கிடைத்தன. எதிர்க்கட்சிகள் யாரும் இல்லாததால் ஒரு ஓட்டு கூட எதிர்த்து விழவில்லை.
முன்னதாக இன்று காலை கூடிய சட்டசபையில், சட்ட அமைச்சர் சுரேஷ் குமார் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து வெளிநடப்புச் செய்தனர். தொடர்ந்து சுயேச்சைகளும் வெளிநடப்புச் செய்தனர். கூட்டத்திற்கே வராமல் மதச்சார்பற்ற ஜனதாதளம் பகிஷ்கரித்தது.
நேற்று நடந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்தான் நம்பிக்கை வாக்கு கோரும் முடிவை பாஜகவினர் எடுத்தனர். இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஆளுநர் மூலம் ஏதாவது குழப்பத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் முயல்வதற்குள் முந்திக் கொண்டு நாமாகவே நம்பி்ககை வாக்கெடுப்பை நடத்தி விடலாம் என்று பாஜக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய சாதனை
நம்பிக்கை வாக்கு கோருவதில் புதிய சாதனை படைத்து வருகிறார் எதியூரப்பா. இன்று அவர் கோரியது கடந்த 3 ஆண்டுகளில் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பாகும். 2008ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது மெஜாரிட்டிக்கு 3 இடங்கள் குறைவாக பாஜகவின் பலம் இருந்தது. இருப்பினும் சுயேச்சைகளின் ஆதரவுடன் 2008ம் ஆண்டு மே 30ம் தேதி ஆட்சியமைத்தார் எதியூரப்பா.
முதலில் 2008ம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் முதல் நம்பிக்கை வாக்கு கோரி மெஜாரிட்டியை நிரூபித்தார் எதியூரப்பா. பின்னர் 2010ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி 11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்கள், ஐந்து சுயேச்சைகள் அரசுக்கு கொடுத்த வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் மீண்டும் நம்பிக்கை வாக்கு கோரினார் எதியூரப்பா. குரல் வாக்கெடுப்பு மூலம் இது நடத்தப்பட்டது. இதில் அவர் பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் அதை ஆளுநர் பரத்வாஜ் ஏற்கவில்லை. இதையடுத்து 3 நாட்களில் மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வாக்கு கோரினார். அதில் வெற்றி பெற்றார்.
தற்போது அவராகவே ஒரு நம்பி்ககை வாக்கெடுப்பை நடத்தி தனது மெஜாரிட்டியை நிரூபித்துள்ளார்.

No comments:
Post a Comment