இயக்குனர் சீமான் மீது தெரிவித்துள்ள புகார் குறித்து, நடிகை விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
01.06.2011 அன்று மாலையில், விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இந்த புகார் மனு பற்றி முதலில் போலீஸ் தரப்பில், உறுதி செய்ய மறுத்துவிட்டனர். 01.06.2011 அன்று இரவு புகார் கொடுத்தது உண்மைதான் என்று தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறினார்.
சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.
இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமி வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரûணை மேற்கொண்டனர். தேவைப்பட்டால் விஜயலட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
விஜயலட்சுமி புகார் குறித்து இயக்குனர் சீமானிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
விஜயலட்சுமி புகார் குறித்து சீமான் நேரடியாக பதில் எதுவும் கூறவில்லை. வழக்கறிஞர் ஒருவர் மூலம் விஜயலட்சுமியின் புகாரை மறுத்துள்ளார்.
No comments:
Post a Comment