பாதுகாப்பு காரணங்களுக்காக திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்லார். அவருக்குப் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 20ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மகளிர் சிறையான சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனுக்களை சிபிஐ கோர்ட், டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்து விட்டன. சிபிஐ கனிமொழி மீதான குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்த பின்னர் சிபிஐ கோர்ட்டை அணுகி ஜாமீன் பெற முயற்சிக்கலாம் என கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கே இன்னும் 45 நாட்களாகலாம் என்று தெரிகிறது.
எனவே அவர் அதுவரை சிறையில்தான் இருந்தாக வேண்டிய நிலை. இந்த நிலையில் முன்பு வேறு சில பெண் கைதிகளோடு சேர்த்து அடைக்கப்பட்டிருந்த கனிமொழி தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் நீரஜ் குமார் கூறுகையில், சக கைதிகளிடையே அவ்வப்போது நடைபெறும் சண்டைகளில் கனிமொழி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கனிமொழியை தனி அறைக்கு மாற்றியுள்ளோம்.
கனிமொழி சிறை விதிகளை முழுமையாகவும், கண்டிப்போடும் கடைப்பிடிக்கிறார் என்றார் அவர்.
கனிமொழியை நேற்று அவரது தந்தை கருணாநிதி, தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

No comments:
Post a Comment