
தன் படத்துக்கு தானே பாட்டெழுதிக் கொள்ளும் பேரரசில் இருந்து, பாடலாசிரியர் வர்றதுக்கு லேட் பண்ணிட்டார். அதனால் நானே எழுதிடலாம்னு எழுதிட்டேன் என்று சமாளிக்கிற இசையமைப்பாளர்கள் வரைக்கும் நாளரு கவிஞர். பொழுதொரு பாட்டு என்று போய் கொண்டிருக்கிறது எண்ணிக்கை!
இதில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் கவிதாசர் தனுஷ். நேற்றுவரை நடிப்போடு நிறுத்திக் கொண்ட அவருக்கு இன்று என்ன புது ஆசை? இந்த கேள்வியெல்லாம் கேட்பதை விட்டுவிட்டு இரண்டாம் உலகம் படத்திற்காக வெயிட் பண்ணலாம். ஏனென்றால் இப்படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் தனுஷ§ம் செல்வராகவனும் இணைந்தே எழுதியிருக்கிறார்களாம். அதைவிட பெரிய ஆச்சர்யம், அவற்றையெல்லாம் பாடியிருப்பதும் அவர்கள் இருவரும்தான்.
இந்த கவிதாசர்களின் பாடல்களுக்கு ட்யூன் போட்டுக் கொண்டிருக்கிற அதிர்ஷ்டசாலி ஜி.வி.பிரகாஷ்!
No comments:
Post a Comment