விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர்-சங்கரை தலித் சகோதரர்கள் என எழுதியதற்காக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, நஞ்சேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (38) கொ.மு.க. மாணவர் அணி செயலாளராக உள்ளார்.
இவரது சார்பில் வக்கீல்கள் லட்சுமிநாராயணன், திருஞானசம்பந்தம், வெற்றி வடிவேல் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறி்யுள்ளதாவது,
கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தினர் பல நூற்றாண்டு காலமாக அண்ணன்மார் சுவாமிகளை வழிபாட்டு தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
அண்ணன்மார் சுவாமிகளின் தோற்றம் மற்றும் மூலத்தையே கேள்விக் குறியாக்கும் விதமாக, தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அப்ரூட் இந்துத்துவா எனும் நூலில், அண்ணன்மார் சுவாமிகளாக வழிபடும் பொன்னர்-சங்கர் இருவரும் தலித் சகோதரர்கள் என்றும், அவர்கள் தம் மக்களின் மீதான ஆக்கிரமிப்பை தடுத்ததால், அண்ணன்மார் சுவாமிகள் தெய்வமாக வழிபடப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நூலை தமிழில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எழுதியுள்ளார். இதை மீனா கந்தசாமி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தை, தலித் சமுதாயத்துக்கு எதிராக தூண்டிவிடும் விதமாக இச்செயல் உள்ளது.
பொன்னர்- சங்கர் இருவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு எவ்வித வரலாற்றுப் பதிவோ, ஆதாரமோ இல்லை.
இதனால் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி நூலாசிரியர்கள் மூவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இது வரை அவர்கள் பதில் அளிக்கவில்லை.
எனவே, குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் இ.த.ச.,153 மற்றும் 153 ஏ பிரிவின் கீழ், இ.த.ச.,505(2) மற்றும் 505(3) பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறப்பட்டுள்ளது.
இம்மனு ஜே.எம்.எண் 1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், நூல் ஆசிரியர்கள் ஜூலை மாதம் முதல் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நூல் ஆசிரியர்கள் திருமாவளவன், மீனா கந்தசாமி, சமையா பதிப்பகத்தின் பதிப்பாளர் மந்த்ரா சென் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment