நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரனும், நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி-பாக்யலஷ்மி தம்பதியின் மகனுமான ஹரி ராதாரவிக்கும், பெங்களூரைச் சேர்ந்த மோகன்-சாந்தி தம்பதியர் மகள் திவ்யா என்கிற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. தமிழில் ‘திருமந்திரம்’ படத்தில், வில்லனாக அறிமுகமாகிறார் ஹரி.
இவர்கள் திருமணம், ஜூன் 5-ம் தேதி காலை 9 மணியளவில், வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 4-ம் தேதி மாலை 6.30 மணியளவில், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திரையுலகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்துகின்றனர்.
No comments:
Post a Comment