ஒரு படம் வெளிவந்தால் அனைத்து பத்திரிகைகளும் படத்தினை பார்த்து விமர்சனம் எழுதுவது என்பது பொதுவான ஒன்று. ஆனால் வெளிநாட்டு பத்திரிகைகள் இந்தி படங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழ் படங்களுக்கு அளிப்பதில்லை.
முதன் முதலாக 'சிவாஜி' படத்திற்கு நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல பத்திரிக்கைகள் அருமையான பொழுதுபோக்கு படம் என வர்ணித்து விமர்சனம் எழுதின.
' முத்து ' படம் ஜப்பானில் வெளியானதால் அங்குள்ள பத்திரிகைகள் அப்படத்தினை பாராட்டி எழுதின.
அடுத்ததாக 'எந்திரன்' படத்தினைப் பற்றி பல்வேறு வெளிநாட்டு பத்திரிகைகள், இணையதளங்கள் அனைத்துமே விமர்சனம் எழுதின. பல பத்திரிகைகள் ' இது ஒரு இந்திய படம் என்பதை நம்ப முடியவில்லை' என்று கூறின.
ரஜினி படங்களுக்கு பிறகு தற்போது 'வேட்டை' படத்திற்கு விமர்சனம் எழுதி இருக்கிறது தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.
அவ்விமர்சனத்தில் " தூத்துக்குடி என்ற கடலோர பகுதியில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, தீயசக்தியை வேட்டையாடும் போலீஸை மையப்படுத்தி அமைந்துள்ளது. பொழுதுபோக்கு, சென்டிமென்ட், காதல், விறுவிறுப்பான சண்டைகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என ஒரு கச்சிதமான பொழுதுபோக்குப் படம்," என குறிப்பிட்டு இருக்கிறார் விமர்சனத்தை எழுதிய ராச்செல் சால்ஸ்.
'வேட்டை' படக்குழுவினர் இவ்விமர்சனத்தால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment