முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைத்துள்ளார். அதன்படி, சி.வி. சண்முகத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை வழங்கப்பட்டுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலம், எஸ்.பி.வேலுமணிக்கு வருவாய்த்துறை, பி. தங்கமணிக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையிலான இந்த மாற்றத்திற்கு கவர்னர் ரோசைய்யா ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அமைச்சரவையை ஏற்கனவே நான்கு முறை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment