தமிழில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிக் கொண்டிருக்கும் படம் 3. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கொலவெறி பாடல் இந்தியாவிலுள்ள அனைவராலும் ரசிக்கப்பட்டாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்த பாடலுக்கு அமிதாப்பச்சனின் குடும்பமே பாராட்டு தெரிவித்தது.
படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமானதால் ஐஸ்வர்யா தனுஷை தன் இல்லத்திற்கு அழைத்த அபிஷேக் பச்சன் கதையை பொறுமையாக கேட்டதாகவும், கதை பிடித்துவிட்டதால் ஐஸ்வர்யாவையே 3 படத்தை இந்தியில் ரீமேக் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்தியில் உருவாகப் போகும் படத்தில் கண்டிப்பாக கொலவெறிப் பாடல் இடம்பெற வேண்டும் என்பது அபிஷேக்கின் விருப்பமாம். அபிஷேக் தன் விருப்பத்தை இவ்வளவு அழுத்தமாக கூறியிருப்பதால், அந்த பாட்டுக்காகத் தான் படத்தை ரீமேக் செய்யச் சொன்னாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தன் முதல் படத்திலேயே இந்தியில் படம் எடுக்கும் அளவுக்கு ஐஸ்வர்யா வளர்ந்துவிட்டதால், ஐஸ்வர்யாவுக்கும், தங்கை சௌந்தர்யாவிற்கும் இடையே இருந்த நீயா? நானா? போட்டி முடிவுக்கு வந்ததாக ரசிகர்கள் கமெண்ட் அடித்துக் கொள்கின்றனர்.ஒருவேளை ரஜினியை வைத்து சௌந்தர்யா எடுத்த ”சுல்தான்” படம் வெளிவந்திருந்தால் நாங்களும் பேசியிருப்போம் என்று சௌந்தர்யா ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.
ரசிகர்களின் இந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்வர்யா அளித்துள்ள பேட்டியில் “எனக்கும் என் தங்கைக்கும் போட்டி இல்லை. ஒரே பீல்டில் இருந்தால் போட்டி இருந்து தான் ஆக வேண்டுமா. சூர்யாவும், கார்த்தியும் கூடத் தான் ஒரே பீல்டில் இருக்கிறார்கள். அவர்கள் என்ன போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்களா?
இந்த வதந்திகளுக்கு யார் காரணம் என்று கூட யாருக்கும் தெரியாது. என்னிடமோ அல்லது தனுஷிடமோ கேட்டுவிட்டு அதன் பின் பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment