சைபர் கிரைம்குற்றங்கள் சமீபகாலமாக பெருகிவருகின்றன. இ.மெயிலில் அப்பாவி மக்களை ஏமாற்றி லட்சம் லட்சமாக மோசடி நடக்கிறது.
இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். ஆன்லைன் கிரிமினல் களிடம் எச்சரிக்கையாய் இருங்கள் என்ற தலைப்பில் இப்படம் தயாராகிறது. இந்த விழிப்புணர்வு படத்தில் கார்த்தி நடிக்கிறார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்டர்நெட் மோசடிகள் பற்றி விழிப்புணர்வு படம் எடுக்க முடிவு செய்ததும் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தோம். அப்போது கார்த்தி பொருத்தமாக இருப்பார் என்று மெஜாரிட்டி பேர் கருத்து தெரிவித்ததால் அவரை அழைத்துள்ளோம் என்றார்.
இதுகுறித்து கார்த்தி யிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சைபர் கிரைம் குற்றங்கள் பற்றிய படத்தில் நடிக்க போலீசார் என்னிடம் கேட்டுள்ளனர். இப்படம் அவசியமானது. சர்வதேச அளவில் இன்டர்நெட்டில் திறமையான மோசடி பேர் வழிகள் உள்ளனர். மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அவர்கள் பணம் பறிக்கிறார்கள். சென்னைவாசிகளும் இதில் நிறைய பணத்தை இழந்து வருகிறார்கள். ஒரு பேராசிரியர் மகள் திருமணத்துக்கு வைத்திருந்த ரூ. 40 லட்சம் பணத்தை இது போன்று மோசடி செய்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment