சென்னையில் ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து 2 வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்றது. பெருங்குடியில் உள்ள பேங்க் ஆப்பரோடா வங்கியில் ரூ18 லட்சமும், கீழ்க்கட்ளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ 14 லட்சமும் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கின. கொள்ளை கும்பல தலைவனின் படத்தை போலீசார் வெளியிட்டனர். அவன் பெயர், ஊர் போன்ற விவரங்கள் வெளியிடப்பட வில்லை அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந் நிலையில், செனை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன் இணை கமிஷனர் சண்முக ராஜேசுவரன் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்தவுடன் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் சுட்டனர் இந்த துப்பாக்கி சண்டையில் 5 வங்கி கொள்ளையர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. இது பற்றி சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், தினத்தந்தி நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் 5 வங்கி கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்தார். 5 வங்கி கொள்ளையர்களின் உடல்களும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை சென்னைநகர மக்கள் பெரிதும் பாராட்டினர்.
இது முடிவு அல்லை தொடக்கம்....
ReplyDelete