விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, February 29, 2012

    எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!


    வேளச்சேரியில் ஐந்து கொள்ளையர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் அடங்கவில்லை. பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொள்ளையர்களில் ஒருவன் காலில் ஷூ இறுக்கமாக அணிவித்தபடி இருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டி இப்படித்தான் ஷூ போட்டு, ஜீன்ஸ் போட்டு ஒருவன் தூங்கிக் கொண்டிருந்திருப்பானா என்றும் கேட்கின்றனர்.

    போலீஸ் என்கவுண்டர்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கிறது - மனித உரிமை ஆர்வலர்கள் இதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்ற போதிலும். ஆனால் இதுவரை இல்லாத பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சைகளையும் வேளச்சேரி என்கவுண்டர் கிளப்பி விட்டு விட்டது. காரணம் ஒட்டுமொத்தமாக ஐந்து பேரை, அதுவும் வட மாநிலத்தவர்களை போலீஸார் குட்டியூண்டு வீட்டுக்குள் வைத்து என்கவுண்டர் செய்ததால்.

    ஒரு சாதாரண வீட்டு வசதி வாரிய வீட்டுக்குள்தான் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. அது ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு. வீட்டுக்குள் நுழைந்தால் வீடு முடிந்து விடும், ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு வந்தால், தெருவே வந்து விடும். அப்படி ஒரு தக்கனூண்டு வீட்டுக்குள் இருந்த ஐந்து பேரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டும் உயிரோடு பிடிக்க முடியாமல் போய் விட்டதா என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய கேள்வி.

    போலீஸார் தேடி வரும் வினோத் குமார் என்ற கொள்ளையன் இந்த வீட்டுக்குள்தான் இருக்கிறான் என்று போலீஸாருக்குத் தகவல் வருகிறது. இதையடுத்து போலீஸ் படை துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அங்கு விரைகிறது.

    நள்ளிரவில் தகவல் வந்ததாக போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். ஆனால், 10 மணிக்கே அந்தப் பகுதியில் இருந்த வீடுகளையும் அணுகிய போலீஸார் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறும், வெளியே வரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

    பின்னர் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது போலீஸ் படை. முன்னெச்சரிக்கையாக வீட்டின் வெளிப்புறத்தைப் பூட்டி விடுகிறார்கள். பிறகு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கதவைத் தட்டுகிறது போலீஸ். உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறப்பதற்குப் பதில் ஜன்னல் வழியாக பார்க்கின்றனராம். போலீஸார் இருப்பதைப் பார்த்ததும் உஷாரான அவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

    இதையடுத்து போலீஸார் முதலில் ஜன்னல் வழியாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சுட்டதாகவும், இதில் ஐந்து பேரும் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இதுவரை நடந்தது ஒரு சம்பவத்தின் தொகுப்பு. இதுதொடர்பாக தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் சந்தேகங்கள், கேள்விகள் குறித்துப் பார்ப்போம்...

    1. இறந்த ஐந்து பேருமே பேண்ட்-சட்டை அணிந்தபடி இருந்திருக்கிறார்கள். மேலும் கால்களில் ஷூக்களும் உள்ளன. லேஸ் கூட கழற்றப்படாமல் கட்டியபடி இருக்கிறது. இப்படி இரவில் யாரேனும் தூங்குவார்களா என்பது முதல் சந்தேகம்.

    2. வீட்டின் சுவற்றில் எந்தவிதமான ரத்தக்கறையும், ரத்தச் சிதறல்களும் இல்லை. மேலும் ஜன்னல் வழியாக கொள்ளையர்கள் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படிச் சுட்டதற்கான எந்தவிதமான வடுவும் இல்லை. ஒரு வேளை சுட்டிருந்தாலும் போலீஸார் திருப்பிச் சுட்டிருப்பார்கள்தானே. அப்படி சுட்டிருந்தால் ஜன்னல் கம்பிகள் சேதமடையாமலா இருந்திருக்கும். ஒரு வேளை ஜன்னல் கம்பிகளுக்குள் தோட்டாக்கள் லாவகமாக புகுந்து செல்லக் கூடிய வகையில் படு திறமையாக போலீஸார் சுட்டார்களா என்பது இன்னொரு சந்தேகம். விஜயகாந்த் படத்தில்தான் இப்படிப்பட்ட காட்சிகளப் பார்க்க முடியுமே தவிர நிஜத்தில் இது சாத்தியமில்லை.

    3. ஐந்து பேரும் சுட்டார்கள், பதிலுக்கு நாங்களும் சுட்டோம் என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் கூட துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான எந்தவிதமான அறிகுறியும் தங்களுக்குத் தெரியவில்லை, துப்பாக்கி் சண்டை நடந்தால் சத்தம் கேட்குமே, அது கூட தங்களுக்குக் கேட்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதற்குப் போலீஸ் தரப்பு விளக்கம் என்ன?. (இதனால் வெளியில் எங்கேயோ வைத்து இவர்களை போட்டுத் தள்ளிவிட்டு இந்த வீட்டுக்குள் கொண்டு வந்து உடல்களை போட்டுவிட்டு, சம்பவம் அங்கு நடந்தது போல காட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள், இந்த எண்கெளன்டர் நாடகத்தை ஏற்க மறுப்போர்).

    4. போலீஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட பின்னர் அப்பகுதியில் இருந்த வீடுகளை மூடிக் கொள்ளுமாறும், யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது என்றும் மக்களை எச்சரித்தது ஏன்?.

    5. உள்ளே இருப்பது பயங்கரமான கொள்ளையர்கள் என்று போலீஸார் நம்பினால், அவர்களை உயிருடன்தானே பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும். அவர்களைப் பிடித்து விசாரித்தால்தானே அவர்களுக்கு எந்தெந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். அப்போதுதான பல வழக்குகளுக்கு விமோச்சனம் கிடைக்கும். ஐந்து பேரும் பெரிய அளவிலான ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரியவில்லை. அவர்களை, ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு நாமதான் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் தமிழக போலீஸாரால் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது ஏன். அது காவல்துறைக்கே அவமானமாக இருக்கிறதே. அட, மயக்க மருந்துப் புகையை உள்ளே செலுத்தியாவது பிடித்திருக்கலாமே...

    இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பி்ல இதற்குப் பதில் இல்லை. (முதல்வர் ஜெயலலிதாவும், சம்பவம் ஏதோ குஜராத்தில் நடந்தது மாதிரி இந்த சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் கனத்த அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது)

    அதேசமயம், இது திட்டமிட்ட என்கவுண்டர்தான். இன்னும் சொல்லப் போனால் போலீஸார் வேண்டும் என்றேதான் ஐவரையும் கொன்றார்கள் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

    அதாவது சம்பவம் நடந்த புதன்கிழமை காலையே வினோத் குமார் போலீஸில் சிக்கி விட்டான். அவனை தங்களது கஸ்டடியில் வைத்து போலீஸார் விசாரித்தபோது உண்மைகளைக் கக்கியுள்ளான். தான் தங்கியிருந்த வீட்டையும் அவன் கூறியுள்ளான். இதையடுத்து மற்ற நால்வரையும் அள்ளிக் கொண்டு வந்த போலீஸார், ஐந்து பேரையும் விசாரித்து, பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் எங்கேயோ வைத்து ஐவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை வேளச்சேரி வீட்டில் கொண்டு வந்து போட்டு செட்டப் செய்து விட்டனர் என்பது ஒரு வாதமாக உள்ளது.

    இன்னொரு வாதம் என்ன சொல்கிறது என்றால், ஐந்து பேரையும் அதே வீட்டில் வைத்து வளைத்துப் பிடித்த போலீஸார், உள்ளே நுழைந்து ஐவரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள்தான் கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் உள்ளேயே வைத்து சுட்டு வீழ்த்தினர் என்கிறது.

    தமிழக அளவில் பெரும் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதாலும், பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாலும் ஆத்திரத்தில் போலீஸார் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது அந்த வாதமாகும்.

    போலீஸ் தரப்பில் சிலர் இதுகுறித்துக் கூறுகையில், இது செட்டப்பா அல்லது இயற்கையானதா என்பது இப்போது பிரச்சனையில்லை. தயவு செய்து அதுகுறித்து யாரும் ஆய்வு செய்ய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற துணிகரக் கொள்ளைச் சம்பவங்களில் யாரும் ஈடுபட அஞ்ச வேண்டும். அதற்கு இது ஒரு வார்னிங் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே பார்க்க வேண்டும். 100 கோடி பேர் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் நிம்மதியாக வாழ ஒரு ஐந்து கிரிமினல்கள் செத்துப் போவதில் தப்பில்லையே என்று 'நாயகன்' பட டயலாக் கணக்கில் கூறுகிறார்கள்!.


    Posted by விழியே பேசு... at 4:01 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ▼  February (295)
      • அடுத்த மாதம் அஜீத்தின் 'பில்லா-2' பட டிரெய்லர்
      • ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு: ரேஷன் கார்டை ப...
      • ஆசிய கோப்பை அணி: சச்சின் உள்ளே ...ஷேவாக் வெளியே ...
      • 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!! சூர்யாவின் ...
      • இன்று லீப் தினம்-குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாதா?
      • புத்திசாலித்தனத்தில் 'சூப்பர் காப்'...மீண்டும் நிர...
      • எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!
      • பிரதமருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்
      • சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்க...
      • பசுபதி என்னும் நடிகன்!
      • சொந்தக் குரலில் விஜய் பாடல்!
      • விஜய் படத்தில் விகரம்
      • ஹோமோ, லெஸ்பியன் செக்ஸை எதிர்க்கவில்லை-உச்ச நீதிமன்...
      • இலங்கையை ஊதி தள்ளி இந்தியா அதிரடி வெற்றி
      • நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு ரூ.8883 கோடி சொத்துக்கள்
      • பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்
      • காப்பாற்றுங்கள்- மேனனுக்கு கோத்தபயா அவசர கோரிக்கை
      • ஜெனீவாவில் திரண்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
      • அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?
      • ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்
      • அஜீத்தின் பில்லா-2' வில் கவர்ச்சி வேடத்தில் நயன்தா...
      • '3' படத்தில் கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?
      • ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன் பிளஸ்-2 தேர்வு எழுதுகி...
      • கோச்சடையானில் ரஜினியுடன் நாகேஷ் ; வெளிவராத புதிய த...
      • சிறப்பு பார்வை: 5 ஆஸ்கர்களை வென்ற காதல் காவியம் '...
      • அடுத்த படம் ! : ஷங்கர்
      • நாளை வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடாது?
      • பத்மநாபசுவாமி கோவிலின் 'சி' அறை திறப்பு-கேரளாவில் ...
      • நதிகள் இணைப்பு திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
      • 84 வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு
      • வீடுகள் மீது விழும் கற்கள்: 20 நாட்களாக தூக்கத்தை ...
      • ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள...
      • தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் 22 மீனவர்கள் சிற...
      • பிரான்சை வீழ்த்தி ஒலிம்பிக்கில் விளையாட இந்திய ஆக்...
      • ஆசிய கோப்பை கிரிக்கெட்:சேவாக், சச்சினுக்கு ஓய்வு?
      • ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள்
      • வேற்று கிரக வாசிகள் எப்போது வருவார்கள்... விஞ்ஞானி...
      • எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்த...
      • சங்கரன் கோவில் தேர்தல்: 32 அமைச்சர்கள் தீவிர பிரசாரம்
      • கேரளாவில் பார்த்திபனுக்கு விருது!
      • மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்
      • அஜீத்தையும் விட்டுவைக்காத வாஸ்து!
      • ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கேவலமாக தோற்ற இந்தியா
      • ஏலத்திற்கு வருகிறது கொலவெறி புகழ் 3 படம் ஏலத்தில் ...
      • என்கவுண்டரை விசாரிக்க வந்த மனித உரிமை அமைப்பினர்கள...
      • அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்-ஜெ.
      • எங்களைத் தொட்டால் இஸ்ரேலை அழித்தொழித்து விடுவோம்-ஈ...
      • இலங்கைக்கு நாளை ஜெனீவாவில் 'அடி' கிடைக்குமா?
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் மாற்றம்- புதிய வேட்ப...
      • பிரபல நடிகர் நாகார்ஜுனா அரசியலில் குதிக்க முடிவு
      • நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் :...
      • சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் மவ...
      • 'தேர்வாளர்களின் பயம், விளம்பரதாரர்கள் நிர்பந்தமே ச...
      • ஐ.நா. முன்பு தமிழர்கள் அணிதிரள சீமான், சத்யராஜ் அழ...
      • என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!
      • இறுதிப் போரில் 9,000 பேர் பலி - இது இலங்கை காட்டும...
      • தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆஸ...
      • தமிழக மாவட்டங்களுக்கு மின் விடுமுறை நாட்கள்: மின்ச...
      • சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்கள் பற்றி திடுக்கிட...
      • ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை மிரட்டின...
      • இந்திய அணிக்கு "3' கேப்டன்கள் *பலிக்குமா புது "பார...
      • உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய புதிய கிரகம் கண்...
      • சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல
      • ‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்? :ஆர்வமாக கேட்டறிந்த...
      • செல்போன் இணையம் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு
      • ரஜினியையும் சூர்யாவையும் மிஞ்சிய லாரன்ஸ் !
      • என்கவுன்டரில்: கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிற...
      • 'இந்திய’னை மிஸ் பண்ணிட்டேன்! : ரஜினி கவலை
      • கோச்சடையானிலிருந்து தீபிகா விலகலா...?!
      • பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் ...
      • பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!
      • மீண்டும் விஜய்யின் துப்பாக்கி !
      • உரிமைக்காக போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றழ...
      • தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வ...
      • மெளன குரு
      • சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா
      • ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: ம...
      • சற்றும் அசராத கொள்ளையர்கள்..மதுரையில் வங்கியைக் கொ...
      • வெள்ளைக்காரன் காலத்துல நல்லா இருந்தோமே..ஆர்.எஸ்.எஸ...
      • தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்
      • இதுவரை 75 பேர் பலி- தமிழகத்தில் எப்போது தொடங்கியது...
      • வேலைக்காரியை கற்பழிக்க முயன்ற நீதிபதி
      • நாடு முழுவதும் இன்று சினிமா காட்சிகள் ரத்து!
      • கொள்ளையர் குறித்து துப்பு கொடுத்த ரவுடியின் மகள்!
      • தமிழகத்திலேயே மிகப் பெரிய போலீஸ் என்கவுண்ட்டர் இது...
      • மணந்தால் ஆஞ்சநேயன்...! அனன்யா உறுதி!
      • தேர்தல் கமிஷனின் அதிகாரம் பறிப்பா?
      • வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுகொலை: போலீசார் அதி...
      • 'பெட்ரோமாக்ஸ் லைட்' வைத்தாவது தேர்தல் நடத்துவோம்-ப...
      • ஐஸ்வர்யாராய் மகள் பெயர்
      • வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான...
      • வாளமீன் பாடலில் நடித்த நடிகர் மரணம்
      • அட பாவீகளா எல்லாம் நாடகமா? ஜெயலலிதா, சசி சந்திப்பு
      • தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது
      • எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்?
      • துணை நடிகைகளை வைத்து விபசாரம் : பிரபல நடிகை சோபனா ...
      • வரும் தேர்தலில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்
      • தமிழர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்காவும் பதறும் இந்...
      • அஜித்துக்கு சவால் விட்ட சேரன்: சிவாஜி படத்தை ரீமேக...
      • பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆறு பேர்
      • லஞ்ச, ஊழல் ஒழிய என்ன வழி அப்துல் கலாம் யோசனை
      • விஷாலுடன் நடிக்க ஸ்ருதி மறுப்பா? -சுந்தர்.சி விளக்கம்
      • மைக்ரோசாப் விண்டோஸின் லோகோவில் மாற்றம்
      • சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்றது ஏன்?: மு.க.ஸ்ட...
      • ஜெனிலியா கணவருரோடு ப்ரியாமணி...!
      • விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன்...!
      • தமிழ் புத்தாண்டில் வருகிறது சகுனி...!
      • மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் ஹீரோவாகிறார்!
      • சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்...!
      • விஜய் கொடுத்த சரக்கு பார்ட்டி!
      • மு.க.அழகிரியை அவமதித்தாரா கே.என்.நேரு?-திமுகவில் அ...
      • ஜெ. சவாலை ஏற்றார் விஜயகாந்த்..களத்தில் குதித்தது த...
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் யார் கோஸ்ட்டி
      • தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!
      • தேமுதிகவை அழிக்கும் வேலையில் அதிமுக; சுதாகரித்து க...
      • நாடகங்களை நான் நம்புவதில்லை-சசிகலா அழுகை குறித்து ...
      • சிரஞ்சீவி மகனுக்கு பார்த்திபன் அப்பாவாம்
      • மதிமுகவை ஓரங்கட்டவே சங்கரன்கோவிலில் திமுக போட்டி?
      • நடராஜன் கைது செய்யப்பட்டது ஏன்?
      • கோச்சடையானுக்கு கடும் போட்டி!
      • அணுமின் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் முற்றுக...
      • முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன்க்கு ஜாமீன் இ...
      • சசிகலாவின் கணவர் நடராஜன் கைது : பரபரப்பு
      • ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!
      • பிரபுதேவாவை அழிக்கும் முயற்சியில் நயன்தாரா!
      • ஹன்ஸிகாவை சுற்றி வளைத்து ரசிகர்கள் 'கசமுசா'!
      • யுவராஜ் நிலையை மோசமாக்கிய ஒரு சாமியாரும் மருத்துவர...
      • சீமானால் மும்பையில் தமிழர் பகுதிகளில் காங்கிரஸ் ப...
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.