ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் பிப்ரவரி 27-ல் தொடங்கும் போது இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. முன்பாக புலம்பெயர் தமிழர்கள் அணிதிரள வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெனீவாவை நோக்கிய தமிழ் இளைஞர்கள் மேற்கொண்டுள்ள நடை பயணங்களுக்கு எமது வாழ்த்துகள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் பிப்ரவரி 27-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்நாளில் தமிழினப் படுகொலையை நிகழ்த்தியுள்ள இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி, எமது உரிமைக்கான குரலை ஓங்கி ஒலிக்க அனைவரும் மனித உரிமை அமைப்பின் கூட்டம் நடைபெறும் அரங்கம் முன் அணிதிரள வேண்டும் .
எமக்கான சுவசாத்தை நாமே சுவாசிப்பது போல், எமது விடுதலையை நாமே போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஓடாத மானும் போராடாத இனமும் வென்றெடுத்ததாக சரித்திரம் இல்லை எனும் புதுவை இரத்தினதுரையின் வரிகளுக்கமைய அனைவரும் எழுந்து ஆர்ப்பரித்து ஐ.நா முன்பாக அணிதிரளுவோம், என்று அதில் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் சத்யராஜ்
இதேபோல் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிப்ரவரி 27ந் தேதி ஜெனீவாவில் தொடங்கும் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தின் போது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் .
இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை கோரியும் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும் தமிழர்கள் அனைவரும் ஐ.நா. முன்பாக ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும்.
இலங்கை அரசுக்கு எதிரான ஆதரவை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ள நேரத்தில் தமிழர்களாகிய நாம் எமது எழுச்சியைக் காட்டவேண்டியது அவசியமாகின்றது. அந்த எழுச்சியே அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்.
அந்த எழுச்சியை நாம் காட்டவேண்டுமானால் நமக்குள் இருக்கும் பேதங்களை, நமக்குள் இருக்கும் கிளைகள் அனைத்தையும் மறந்து ஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் ஒற்றை வார்த்தைக்காக எல்லா பேதங்களையும் மறந்து நாம் பெரியளவில் ஒன்றுகூடவேண்டும்.
அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போதுதான் உலக நாடுகளின் கவனம் நம் பக்கம் திரும்பும். எனவே எல்லோருடைய கவனத்தையும் நம் பக்கம் திருப்ப வேண்டும் என்றால் நமது ஒற்றுமையும், ஒன்றுகூடும் கூட்டத்தின் அளவுமே அதனை ஏற்படுத்தும்.
அனைவரினது கவனமும் நம் பக்கம் திரும்பும் போது தான் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் எமது இலட்சியம் வெற்றிபெறும், என்றார் அவர்.
நன்றி, தமிழகத்தின் குரலை ஒலிக்க நீங்களாவது இருக்கிறீர்களே. உரக்க ஒலிக்க வேண்டியவர்கள் வாயை மூடிக் கொண்ட நிலையில்.
ReplyDelete