உலகில் ஏனைய நாடுகளை ஒப்பிடுகையில் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் வித்தியாசப்பட்டது. மேலை நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரின சேர்க்கையை இந்தியாவில் நாம் அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009 ல் ஒரின சேர்க்கைக்கு அனுமதி வேண்டும் என கோரி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் ஒத்திசைவு கொண்ட ஒரினத்தவர்கள் சேர அனுமதி மறுக்க வேண்டியது அவசியமில்லை என் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட்டில் : ஒரின சேர்க்கை இயற்கைக்கு எதிரானது. இது சமூக சூழலை கெடுத்து விடும். மேலும் எய்ட்சை பரப்பும் தன்மை கொண்டது. பிற நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்டது. மேலை நாட்வர்களை நாம் பின்பற்ற முடியாது. நமது நாட்டிற்கென தனிச்சிறப்பு உண்டு இதனால் இதனை அனுமதிக்க முடியாது. குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சட்டங்களை பதம் பார்க்கும் அளவில் இருப்பதால் இது பெரும் சட்ட சவால்கள் மாற்றத்தை கொண்டு வரவேண்டியது வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் தனது கருத்தில முரண்பட்டிருந்தது. இதன் மூலம் எய்ட்ஸ் பரவாது என்று கூறியிருந்தது. இதனால் எய்ட்ஸ் பரவுமா இல்லையா என தீவிரமாக கண்டுபிடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. மேலும் இது போன்ற ஒரின சேர்க்கையை எத்தø நாடுகள் அங்கீகரிக்கிறது? எத்தனை நாடுகளில் குற்றச்செயல்களாக பார்க்கப்டுகிறது என்ற விவரத்தை தருமாறும் நீதிபதிகள் அரசு தரப்பு வக்கீலிடம் கேட்டு கொண்டனர்.
No comments:
Post a Comment