சென்னையில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களில் ஒருவன் இந்தியில் மட்டுமின்றி தெலுங்கிலும் பலருடன் பேசி உள்ளான். சில நாட்கள் இரவில் அவன் வீட்டுக்கு வெளியில் வந்து செல்போனில் தெலுங்கில் பேசியுள்ளான்.
கொள்ளையர்கள் அறைகளில் சிக்கிய சிம்கார்டுகளில் பதிவாகி உள்ள போன் எண்களில் பல ஆந்திரா, பீகாரில் உள்ள மர்ம நபர்களுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. அந்த போன்கள் எந்த பகுதியில் இருந்து பேசப்பட்டது என்று ஆய்வு செய்தபோது, மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள காட்டுப்பகுதியை காட்டியது.
எனவே சென்னை வங்கி கொள்ளையர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இல்லையெனில் இந்த கொள்ளையர்கள் மாவோயிஸ்டுகளுக்கு நிதி திரட்டி கொடுப்பவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. கொள்ளையர்கள் பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளையடித்த 22 லட்சம் ரூபாயை என்ன செய்தார்கள் என்பதில் மர்மம் நீடிக்கிறது.
ரியல்- எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. பெங்களூர் சென்று அழகிகளுடன் உல்லாசமாக இருந்ததாக மற்றொரு தகவல் வெளியானது. இதுபற்றி தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மிருகத்தனமான மனிதப் படுகொலைக்கு வக்காலத்து வேறா? மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் போராடும் இன்றைய நாளில் என்கௌண்டர் அகிம்சை பேசிய காந்தீய நாட்டிலா நடக்கிறது என்ற கேள்வியே எழுகிறது. ஒரு சமயம் அந்த இடத்தில் இருந்தவர்கள் குற்றமற்ற அப்பாவிகளாக இருந்தால்...? சிங்கள ராஜபக்சேயும் சோனியா இந்தியாவும் பங்காளிகள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
ReplyDelete