விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, February 21, 2012

    தமிழர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்காவும் பதறும் இந்தியாவும்


    பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநாடு அமைத்துக் கொள்ளக் கூடிய "சுயநிர்ணய உரிமை" என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான்.

    அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வேடத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஏற்காத அமெரிக்கா இப்போது சுயநல நோக்குடன் பலுசிஸ்தான் தனி நாடாகலாமே என்று சப்பை கட்டுவதாக கூறப்படுகிறது.

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை இருமுறை அழைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டு அனைத்து ஊடகங்களும் இத்தகைய தீர்மானங்களின் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் குற்றம்சாட்டி, அப்படியானால் இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் தனிநாடு அமைக்கும் சுயநிர்ணய உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றன.

    பலுசிஸ்தான் விவகாரம் என்ன?

    ஈரான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளைக் கொண்டது பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்கும் பலுசிஸ்தான்.

    பலுசிஸ்தானியர்கள் பழங்குடி இன மக்கள். இவர்களது நலன்களை நீண்டகாலமாகவே பாகிஸ்தான் அரசுகள் புறக்கணித்து வருகின்றன என்பது குற்றச்சாட்டு.

    இதனால் தங்களது மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி ஆயுதப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் பலுசிஸ்தானியர்கள்.

    பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அனைத்துவித மூர்க்கத்தனமான இனப்படுகொலைகளையும் பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

    அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், தமிழினப் படுகொலை நிகழ்த்தியதுபோல் நாங்கள் பலுசிஸ்தான் இனப் படுகொலை நடத்த வகுப்பு எடுக்குமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பலுசிஸ்தானின் முக்கியத்துவம்

    பலுசிஸ்தான் ஒரு தனி மாகாணம் மட்டுமல்ல. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பூகோளப் பிரதேசமும் கூட.

    பலுசிஸ்தான் மாகாணத்தின் கவ்தார் துறைமுகம் மிக முக்கியமான ஒன்று. இந்த அரபிக் கடல் துறைமுகம் இப்போது சீனாவின் வசம் உள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்த துறைமுகத்தில் இறக்கி வைத்து இங்கிருந்து எல்லை மாகாணங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்வதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று கணக்குப் போட்டது சீனா.

    ஏனெனில் அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் மட்டுமின்றி மலாக்கா ஜலசந்தியைத் தாண்டி தங்கள் நாட்டுக்கு கொண்டுபோய் அங்கிருந்து மீண்டும் எல்லை மாகாணங்களுக்கு கச்சா எண்ணெய் அனுப்புவதற்கு பெரும் பொருட்செலவை செய்து வந்தது சீனா.

    இந்த செலவுக்குப் பேசாமல் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை தூர்வாரி சீரமைத்து விரிவாக்கி ஒரு ரயில் பாதையையும் போட்டுவிட்டாலே பாதி பணம் மிச்சம் என்று கணக்குப் போட்டு வெற்றியும் பெற்றுவிட்டது சீனா.

    துறைமுகப் பணிகளை சீனா மேற்கொண்டபோதும் ரயில் பாதை பணிகளின் போதும் பலுசிஸ்தானியர்கள் சும்மா இருக்கவில்லை. இத்தகைய பணிகளில் பலுசிஸ்தானியர்களுக்கு முன்னுரிமை கோரினர். சீனாவும் பாகிஸ்தானும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.சீன நாட்டவரையே பயன்படுத்திக் கொண்டனர்.

    இதனால் அவ்வப்போது சீனப் பொறியாளர்களை பலுசிஸ்தான் ஆயுதக் குழு கடத்திச் செல்வது வாடிக்கையாகிப் போனது.

    அமெரிக்காவின் தலையீடு

    அரபிக் கடலின் 'இங்கிட்டு' கவ்தார் 'அங்கிட்டு' சவூதி அரேபியா, அப்பால ஈரான், இப்பால ஆப்கானிஸ்தான்.. சீனா என ஒட்டுமொத்த எதிரிகள் கூடி கும்மியடிக்கும் இடமாக பலுசிஸ்தான் இருக்கிறதே என்ற கவலை அமெரிக்காவுக்கு.

    ஈராக்கில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரைக்கும் வந்து பாகிஸ்தானில் பின்லேடனை சாய்ச்சு எல்லாம் செஞ்சாச்சு..ஈரான்தான் பாக்கி... இஸ்ரேலைவிட்டு அடிச்சா சேதாரம் ரொம்ப அதிகம்... நாமளே அடிக்கலாம்.. எப்படி அடிக்கலாம்? என்ற யோசனைகளுக்கான விடைதான் அமெரிக்காவின் தற்போதைய தீர்மானம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    பாகிஸ்தானை துண்டாடிட்டு பலுசிஸ்தானை தனிநாடாக்க அனுமதித்தால் சீனாவுக்கும் நெருக்கடி,பாகிஸ்தானுக்கும் ஆப்பு. பலுசிஸ்தானில் ஊடுருவிவிட்டால் மத்திய கிழக்கு நாட்டிலும் கால்வெச்சமாதிரி, தெற்காசியாவிலும் கால்வெச்ச மாதிரி என்கிறது அமெரிக்க கணக்கு.

    இந்தியா நிலை

    பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமை விவகாரத்தில் இந்தியா மெளனமாகவே இருந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியா என்ற நாடே பல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை கபளீகரம் செய்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் மூச்சேவிட வாய்ப்பில்லை.

    இருப்பினும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிக்கல் என்பதால் மெளனமாக சிரித்தாலும் அடிவயிறு கலங்கியேத்தான் கிடக்கும். ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக சுயநிர்ணய உரிமை கோரி போராடிய வெற்றிபெற்ற இயக்கமாக வலம்வந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

    தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு அமைத்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து அகன்ற தமிழ்நாட்டை தென்னாசியாவில் உருவாக்கிவிடுவார்கள் என்ற அச்சமே முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று புதைக்க கரம் கொடுத்தது.

    இந்த அச்சம்தான் இன்றளவும் தமிழ்நாட்டு விவகாரங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு இருக்கிறது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

    விடுதலைப் புலிகளும் அமெரிக்காவும்

    தற்போது பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் அமெரிக்கா, இதே உரிமை கோரி ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க துணை நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    பலுசிஸ்தானத்தில் எப்படி ஒரு கவ்தாரோ அதுபோலத்தான் தமிழீழத்தின் தலைநகராக கருதப்படும் திருகோணமலை துறைமுகமும்.

    திருகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தென்னாசியாவையே கையில் வைத்திருப்பவர்கள் என்பது ராஜராஜசோழன் காலத்திலிருந்து தெற்காசிய பிராந்தியம் கண்டுவரும் உண்மை.

    திருகோணமலைக்காக 1980களிலேயே அமெரிக்கா முயற்சித்தது. இலங்கையும் இடம் கொடுத்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒருநாட்டுக்கும் இலங்கை அனுமதி கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் எச்சரித்தார்.

    1990களுக்குப் பிறகு நிலைமை தலைமைகீழ்.

    சுயநிர்ணய உரிமை, தனிநாடு கோரிக்கையை கெட்டவார்த்தையாக நினைத்து சொந்த நாட்டு குடிமக்களின் உறவுகள் என்று கூட பார்க்காமல் தமிழர்களை விரோதிகளாகப் பார்த்து சீனாவுக்கு சிங்களவர்களோடு இணைந்து சிவப்புக் கம்பளம் விரித்தது.

    இதில் சீனா,பாகிஸ்தான், இலங்கை, இந்தியா அத்தனை எதிரிகளும் ஓரணியில் வரிந்து கட்டி தமிழினத்தையே நிர்மூலமாக்கிவிட்டனர்.

    இறுதி யுத்தகாலத்தில் குறிப்பாக 2002-ல் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான நார்வேயின் தலையீட்டில் உருவான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகளுடன் திருகோணமலைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கேற்கவும் அமெரிக்கா பேரம் பேசியது.

    தலிபான் விவகாரத்தை முற்றாக நிராகரித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமது மாவீரர் நாள் உரையில் பிராந்திய வல்லரசுகள் மற்றும் மேற்குலக நாடுகள் தமிழீழப் பிரதேசத்தின் மீது அக்க்றை கொள்வதற்கான பின்புலமாக அவர்களது நலன்களும் இருக்கின்றன என்பதை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி வந்தார்.

    இந்தியாவின் தலையீட்டால் புலிகளை ஒழிக்க அமெரிக்கா இலங்கைக்கு கை கொடுத்தது. இதே அமெரிக்காதான் இப்போது தெற்காசிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக செக் வைப்பது போல 'சுயநிர்ணய உரிமை" என்ற ஆயுதத்தை முன்வைக்கிறது.

    எந்த சுயநிர்ணய உரிமை முழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று இந்தியா நினைத்ததோ அது இப்போது டெல்லிக்கு ரொம்ப பக்கத்திலேயே கேட்கிறது என்பதுதான் முக்கியம்.


    Posted by விழியே பேசு... at 10:07 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousFebruary 21, 2012 at 10:26 PM

      ஏழை அழுத கண்ணீர். அமெரிக்காவின் நாடகம் அதன் கண்களையே குத்தப் போகிறது. நேபாளம்,தீபெத் சீனாவின் கைகளுக்கு மாறப் போகும் பலுசிஸ்தான்.அமெரிக்காவின் பயமுறுத்தல்கள் இனி வேகாது.சீனா பலம் பெற்று விட்டது.ஈரான் எச்சரிக்கை விடுகிறது.பணக்கார பொலீஸ்காரன் பொருளாதார சிக்கலில். சோனியா இந்தியாவிற்கு கிடைக்கப் போகும் அடி.சீனாவின் பாம்பு தன் வாயை அகலத் திறந்து இந்தியாவை கவ்வ தயாராகி விட்டது. இலங்கையில் அமைக்கப்பட்டு இருக்கும் சீன இராணுவ நிலைகள்.ஆனால் கவலைக்குரியது வாய்க்குள் அகப்படப் போவது சோனியா இந்தியா அல்ல மீண்டும் நாம் தமிழர்கள் தான்.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ▼  February (295)
      • அடுத்த மாதம் அஜீத்தின் 'பில்லா-2' பட டிரெய்லர்
      • ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு: ரேஷன் கார்டை ப...
      • ஆசிய கோப்பை அணி: சச்சின் உள்ளே ...ஷேவாக் வெளியே ...
      • 'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!! சூர்யாவின் ...
      • இன்று லீப் தினம்-குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாதா?
      • புத்திசாலித்தனத்தில் 'சூப்பர் காப்'...மீண்டும் நிர...
      • எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!
      • பிரதமருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்
      • சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்க...
      • பசுபதி என்னும் நடிகன்!
      • சொந்தக் குரலில் விஜய் பாடல்!
      • விஜய் படத்தில் விகரம்
      • ஹோமோ, லெஸ்பியன் செக்ஸை எதிர்க்கவில்லை-உச்ச நீதிமன்...
      • இலங்கையை ஊதி தள்ளி இந்தியா அதிரடி வெற்றி
      • நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு ரூ.8883 கோடி சொத்துக்கள்
      • பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேருகிறார்
      • காப்பாற்றுங்கள்- மேனனுக்கு கோத்தபயா அவசர கோரிக்கை
      • ஜெனீவாவில் திரண்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
      • அனன்யா-ஆஞ்சநேயன் திருமணம் நடக்குமா?
      • ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்
      • அஜீத்தின் பில்லா-2' வில் கவர்ச்சி வேடத்தில் நயன்தா...
      • '3' படத்தில் கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?
      • ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன் பிளஸ்-2 தேர்வு எழுதுகி...
      • கோச்சடையானில் ரஜினியுடன் நாகேஷ் ; வெளிவராத புதிய த...
      • சிறப்பு பார்வை: 5 ஆஸ்கர்களை வென்ற காதல் காவியம் '...
      • அடுத்த படம் ! : ஷங்கர்
      • நாளை வேலை நிறுத்தம்: ஆட்டோ, பஸ் ஓடாது?
      • பத்மநாபசுவாமி கோவிலின் 'சி' அறை திறப்பு-கேரளாவில் ...
      • நதிகள் இணைப்பு திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
      • 84 வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு
      • வீடுகள் மீது விழும் கற்கள்: 20 நாட்களாக தூக்கத்தை ...
      • ஹஸ்ஸிக்கு சாதகம், தெண்டுல்கருக்கு பாதகம்: நடுவர்கள...
      • தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் 22 மீனவர்கள் சிற...
      • பிரான்சை வீழ்த்தி ஒலிம்பிக்கில் விளையாட இந்திய ஆக்...
      • ஆசிய கோப்பை கிரிக்கெட்:சேவாக், சச்சினுக்கு ஓய்வு?
      • ஈரானைத் தாக்க தயார் நிலையில் அமெரிக்க படைகள்
      • வேற்று கிரக வாசிகள் எப்போது வருவார்கள்... விஞ்ஞானி...
      • எல்லா தப்பும் என்மேல தான் சாமியோவ்...ஜெயலலிதா உத்த...
      • சங்கரன் கோவில் தேர்தல்: 32 அமைச்சர்கள் தீவிர பிரசாரம்
      • கேரளாவில் பார்த்திபனுக்கு விருது!
      • மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்
      • அஜீத்தையும் விட்டுவைக்காத வாஸ்து!
      • ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கேவலமாக தோற்ற இந்தியா
      • ஏலத்திற்கு வருகிறது கொலவெறி புகழ் 3 படம் ஏலத்தில் ...
      • என்கவுண்டரை விசாரிக்க வந்த மனித உரிமை அமைப்பினர்கள...
      • அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்-ஜெ.
      • எங்களைத் தொட்டால் இஸ்ரேலை அழித்தொழித்து விடுவோம்-ஈ...
      • இலங்கைக்கு நாளை ஜெனீவாவில் 'அடி' கிடைக்குமா?
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் மாற்றம்- புதிய வேட்ப...
      • பிரபல நடிகர் நாகார்ஜுனா அரசியலில் குதிக்க முடிவு
      • நானும் அரசியல்வாதிதான்; தேர்தலில் போட்டியிடுவேன் :...
      • சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் மவ...
      • 'தேர்வாளர்களின் பயம், விளம்பரதாரர்கள் நிர்பந்தமே ச...
      • ஐ.நா. முன்பு தமிழர்கள் அணிதிரள சீமான், சத்யராஜ் அழ...
      • என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!
      • இறுதிப் போரில் 9,000 பேர் பலி - இது இலங்கை காட்டும...
      • தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆஸ...
      • தமிழக மாவட்டங்களுக்கு மின் விடுமுறை நாட்கள்: மின்ச...
      • சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்கள் பற்றி திடுக்கிட...
      • ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை மிரட்டின...
      • இந்திய அணிக்கு "3' கேப்டன்கள் *பலிக்குமா புது "பார...
      • உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய புதிய கிரகம் கண்...
      • சினிமாவுக்கு வந்ததால் மாப்பிள்ளை கிடைக்கல
      • ‘கொலவெறிடி’க்கு என்ன அர்த்தம்? :ஆர்வமாக கேட்டறிந்த...
      • செல்போன் இணையம் கண்காணிக்கப்படும் - மத்திய அரசு
      • ரஜினியையும் சூர்யாவையும் மிஞ்சிய லாரன்ஸ் !
      • என்கவுன்டரில்: கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிற...
      • 'இந்திய’னை மிஸ் பண்ணிட்டேன்! : ரஜினி கவலை
      • கோச்சடையானிலிருந்து தீபிகா விலகலா...?!
      • பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் ...
      • பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!
      • மீண்டும் விஜய்யின் துப்பாக்கி !
      • உரிமைக்காக போராடும் விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றழ...
      • தகவல் உரிமை சட்டத்தில் வருமானம்-சொத்து விவரங்களை வ...
      • மெளன குரு
      • சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதியா
      • ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: ம...
      • சற்றும் அசராத கொள்ளையர்கள்..மதுரையில் வங்கியைக் கொ...
      • வெள்ளைக்காரன் காலத்துல நல்லா இருந்தோமே..ஆர்.எஸ்.எஸ...
      • தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன்
      • இதுவரை 75 பேர் பலி- தமிழகத்தில் எப்போது தொடங்கியது...
      • வேலைக்காரியை கற்பழிக்க முயன்ற நீதிபதி
      • நாடு முழுவதும் இன்று சினிமா காட்சிகள் ரத்து!
      • கொள்ளையர் குறித்து துப்பு கொடுத்த ரவுடியின் மகள்!
      • தமிழகத்திலேயே மிகப் பெரிய போலீஸ் என்கவுண்ட்டர் இது...
      • மணந்தால் ஆஞ்சநேயன்...! அனன்யா உறுதி!
      • தேர்தல் கமிஷனின் அதிகாரம் பறிப்பா?
      • வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுகொலை: போலீசார் அதி...
      • 'பெட்ரோமாக்ஸ் லைட்' வைத்தாவது தேர்தல் நடத்துவோம்-ப...
      • ஐஸ்வர்யாராய் மகள் பெயர்
      • வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான...
      • வாளமீன் பாடலில் நடித்த நடிகர் மரணம்
      • அட பாவீகளா எல்லாம் நாடகமா? ஜெயலலிதா, சசி சந்திப்பு
      • தமிழகம் இருண்டதை மறைக்க சசிகலா குடும்பத்தினர் கைது
      • எப்போது பில்லா 2 தியேட்டர்களைத் தாக்கும்?
      • துணை நடிகைகளை வைத்து விபசாரம் : பிரபல நடிகை சோபனா ...
      • வரும் தேர்தலில் தேமுதிக ஆட்சியை பிடிக்கும்
      • தமிழர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்காவும் பதறும் இந்...
      • அஜித்துக்கு சவால் விட்ட சேரன்: சிவாஜி படத்தை ரீமேக...
      • பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆறு பேர்
      • லஞ்ச, ஊழல் ஒழிய என்ன வழி அப்துல் கலாம் யோசனை
      • விஷாலுடன் நடிக்க ஸ்ருதி மறுப்பா? -சுந்தர்.சி விளக்கம்
      • மைக்ரோசாப் விண்டோஸின் லோகோவில் மாற்றம்
      • சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்றது ஏன்?: மு.க.ஸ்ட...
      • ஜெனிலியா கணவருரோடு ப்ரியாமணி...!
      • விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன்...!
      • தமிழ் புத்தாண்டில் வருகிறது சகுனி...!
      • மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் ஹீரோவாகிறார்!
      • சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்...!
      • விஜய் கொடுத்த சரக்கு பார்ட்டி!
      • மு.க.அழகிரியை அவமதித்தாரா கே.என்.நேரு?-திமுகவில் அ...
      • ஜெ. சவாலை ஏற்றார் விஜயகாந்த்..களத்தில் குதித்தது த...
      • சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் யார் கோஸ்ட்டி
      • தமிழ் சினிமாவின் அபார நடிகை எஸ்.என்.லட்சுமி மரணம்!
      • தேமுதிகவை அழிக்கும் வேலையில் அதிமுக; சுதாகரித்து க...
      • நாடகங்களை நான் நம்புவதில்லை-சசிகலா அழுகை குறித்து ...
      • சிரஞ்சீவி மகனுக்கு பார்த்திபன் அப்பாவாம்
      • மதிமுகவை ஓரங்கட்டவே சங்கரன்கோவிலில் திமுக போட்டி?
      • நடராஜன் கைது செய்யப்பட்டது ஏன்?
      • கோச்சடையானுக்கு கடும் போட்டி!
      • அணுமின் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் முற்றுக...
      • முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன்க்கு ஜாமீன் இ...
      • சசிகலாவின் கணவர் நடராஜன் கைது : பரபரப்பு
      • ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!
      • பிரபுதேவாவை அழிக்கும் முயற்சியில் நயன்தாரா!
      • ஹன்ஸிகாவை சுற்றி வளைத்து ரசிகர்கள் 'கசமுசா'!
      • யுவராஜ் நிலையை மோசமாக்கிய ஒரு சாமியாரும் மருத்துவர...
      • சீமானால் மும்பையில் தமிழர் பகுதிகளில் காங்கிரஸ் ப...
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.