சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிகவை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது. ஆனால், போட்டியிடுவது இல்லை என்பதை தவிர வேறு கருத்தை சொல்ல முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜ போட்டியிடுகிறது. திமுகவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுகவை சமக, குடியரசு கட்சி போன்றவை ஆதரிக்கின்றன.
மதிமுக தனித்தே களம் இறங்கியுள்ளது. தேமுதிகவை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் தா.பாண்டியனிடம் கேட்டபோது, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். தேமுதிகவை மார்க்சிஸ்ட் ஆதரிப்பது அவர்களது கட்சியின் நிலைப்பாடு. நாங்கள் போட்டியிடுவது இல்லை என்பதை தவிர வேறு கருத்தை சொல்ல முடியாது என்றார்.
No comments:
Post a Comment