வரும் திங்கள்கிழமை முதல் சென்னையில் 2 மணி நேர மின்தடை அமலுக்கு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் மின்விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு திங்கட்கிழமையும், சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமையும், சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிகளுக்கு புதன்கிழமையும், கோவை பகுதிக்கு வியாழக்கிழமையும், நெல்லை, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமையும், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமையும் தொழிற்சாலை வார மின்விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நமக்கு 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. தினமும் 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்பற்றாக்குறை ஏற்படுகிறது.
பள்ளிகளுக்கு முடிந்தவரை தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் எனத்தெரிகிறது. காற்றாலை மின்உற்பத்தி ஜூன் மாதம் துவங்கும்போது மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் தெரிகிறது.
ஊரகப் பகுதிகளில் இது 4 மணி நேரமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆரம்பத்தில் 4 மணி நேரமாக இருந்த மின்தடை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மழைக்காலங்களிலும் கடுமையாக மின்வெட்டு நிலவியது அநேகமாக இந்த ஆண்டாகத்தான் இருக்கும்.
கோவை, திருப்பூரில் 12 மணி நேரம் வரை மின்சாரமில்லாத நிலை நிலவுகிறது.
கிராமப்புறங்களின் இத்தகைய மின்தடை நேரத்தை குறைக்க, சென்னையிலும் மின்தடை அமலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஏற்கெனவே 10 மணி நேரங்களுக்கு மேல் நிலவும் மின்வெட்டு, எந்த அளவு குறையும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது.
No comments:
Post a Comment