சென்னையில் பெருங்குடி, கீழ்க்கட்டளை ஆகிய இடங்களில் உள்ள வங்கிகளில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இக்கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக இருந்தவன் வினோத்குமார். இவனது சொந்த ஊர் பீகார் மாநிலம் பத்துஹா ஆகும்.
போலீசார் ஒரு செல்போன் மூலம் துப்பு துலக்கி வினோத்குமாரின் நெருங்கிய உறவினர் ஒருவரை கண்டறிந்தனர். பின்னர் போலீசார் அவரிடம் வினோத்குமார் சென்னையில் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை கூறி, அவரது உடலை பெற்றுச் செல்லுமாறு கூறினர். இதையடுத்து அவர் நாளைக்குள் சென்னை வந்து வினோத்குமார் உடலை பெற்றுச் செல்வதாக கூறினார்.
அவரிடம் போலீசார் வினோத்குமார் உடல் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உடலை பீகார் கொண்டு செல்ல தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்றனர். அதற்கு அவர், எனக்கு உந்த உதவியும் தேவையில்லை என்று கூறி போனை வைத்து விட்டார். வினோத்குமார் உறவினர்கள் நாளை இரவுக்குள் சென்னை வந்து சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment