84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலில் நடைபெறுகிறது. திரைத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலில் நகரில் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படமாக தாமஸ் தயாரித்த ஆர்டிஸ்ட் திரைப்படம் விருதை தட்டி சென்றுள்ளது. ஹூகோ திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, கலை, சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த விஷ்வல் எஃபக்ட்ஸ் விருதையும் ஹூகோ திரைப்படம் வென்றது. சிறந்த ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மார்க் பிரிட்ஜஸ் (தி ஆர்டிஸ்ட்)க்கு வழங்கப்பட்டது. மார்க் கூலியர், ஜே.ராய் ஹேலந்துக்கு சிறந்த ஒப்பனை விருதும் (படம் : தி அயன் லேடி), சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் ஏ செப்பரேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
தி ஹெல்ப் படத்தில் நடித்த ஆக்டவியா ஸ்பென்சருக்கு சிறந்த துணை நடிகை விருதும் வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகர் விருதை பிகினர்ஸ் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் வென்றுள்ளார். சிறந்த எடிட்டிங் கிரிக் பாக்ஸ்டர், அங்கூஸ் (படம் : தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் படமாக ராங்கோ திரைப்படமும், சிறந்த ஆவணப்படமாக அன் டிபிட்டடு படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தி ஆர்டிஸ்ட் படத்தின் லூடுவிக் போர்சுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனர் விருதை மைக்கேல் ஹாஸனாவிசியஸ் (படம்: தி ஆர்டிஸ்ட்) வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை ஆர்டிஸ்ட் படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின் பெற்றார். தி அயன் லேடி திரைப்படத்தின் நாயகி மெரிஸ் ஸ்டீரிப்புக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
No comments:
Post a Comment