இந்தியாவில் வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு தென் மாநிலங்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்க நதிகளை தேசியமாக்கி ஒன்றாக இணைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிபுணர் குழுவும் இதுபற்றி ஆராய்ந்து நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமே என்று அறிக்கை அளித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி செலவாகும் என்பதால் நதிகள் இணைப்பு திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்தது.
மத்திய அரசு இதில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இதற்கிடையே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்க கோரியும், இது தொடர்பாக மத்திய அரசு கமிட்டி அமைக்க உத்தர விடக்கோரியும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நதிகள் இணைப்பு திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. திட்டத்தை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் செயல்படுத்தவும், இதை கண்காணிக்க உயர்மட்ட அதிகார வரம்புடன் கூடிய கமிட்டி அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment