தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். 93 வயதாகும் இவருக்கு வயிற்றில் பிரச்சினை இருந்து வந்ததை தொடர்ந்து சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் அவர் இன்று அஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க மக்களின் அன்பும், நலம் பெற வாழ்த்தும் எப்போதும் அவரோடு இருப்பதாகவும், அவர் விரைவில் நலம் பெற்று திரும்புவார் எனவும் அதிபர் ஜேகப் சுமாவின் அலுவலம் தெரிவித்துள்ளது.
1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மண்டேலா பொது வாழ்வில் இருந்து 1999-ல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது
No comments:
Post a Comment