2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிங்களப் படைக்குமிடையே நடந்த இறுதிப் போரில் 9000 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இவர்களில் 7000 பேர் வரை ராணுவ மோதலில் இறந்தவர்கள் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில் சாதாரண மக்கள் யாரும் போரில் பலியாகவில்லை என்று இத்தனை நாளும் கூறிவந்த இலங்கை, முதல்முறையாக, 9000 பேர் பலியாகியுள்ளதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தவிர்த்த, அப்பாவித் தமிழ் மக்கள் மட்டுமே 1 லட்சம் வரை கொல்லப்பட்டுவிட்டதாக மனித உரிமை அமைப்புகள், பல நாட்டு அரசியல் விமர்சகர்கள், சர்வதேச செய்தியாளர்கள் கூறிவரும் நிலையில், இலங்கை அரசு அப்பட்டமான பொய்யை அரசு தகவலென அவிழ்த்துவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அலுவலகத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வடக்கில் உள்ள மக்களை அந்த அலுவலக அதிகாரிகள் நேர்காணல் நடத்தி இந்த தகவல்களை வெளியிட்டிருந்தாகத் தெரிகிறது.
இறுதிப் போரின் சிங்களப் படைகளின் பெரும் தாக்குதல் நடந்த முல்லைத்தீவிலேயே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கிறார்கள்.
மேலும் 2009 ஆண்டு 4,156 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.
போரின் போது இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களா அல்லது விடுதலைப்புலிகளா அல்லது அவர்களது இறப்புக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாக அரசுத் தரப்பு குறிப்பிடவில்லை.
முதலில் தாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று கூறிய இலங்கை அரசாங்கம், பின்னர் அண்மையில் ''சில பொதுமக்களை தமது தரப்பு கொன்றிருக்கலாம்'' என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த குழுவின் அறிக்கையில் 40 000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற கூறப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கையோடு ஒப்பிட்டால்கூட, இலங்கை அரசு கூறியுள்ள தகவல் அப்பட்டமான பொய் என்பது தெரியவரும்.
ஐநா குழுவிலிருந்து சாவேந்திர சில்வா ஒதுக்கி வைப்பு
இதற்கிடையில், முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவரான சாவேந்திர சில்வாயை ஐநா ஆலோசனைக் குழுவிலிருந்து விலக்கி வைத்துள்ளார் ஐநா மூத்த அதிகாரி லூயிஸ் ஃபிரச்செட்.
போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்படும் சாவேந்திர சில்வாவை குழுவில் அனுமதிக்க முடியாது என லூயிஸ் கூறியிருந்தார்.
இது தங்களை அவமானப்படுத்தும், சகிக்க முடியாத அராஜகம் என இலங்கை வர்ணித்துள்ளது.
நீதி தன் கண்களை திறக்க ஆரம்பித்துள்ளது. சிங்களத்திற்கு துணை போன விஜய் நம்பியார் நடந்ததை சொல்ல ஆரம்பித்துள்ளார்.சோனியா இந்தியா சறுக்க ஆரம்பித்த வேளியில் சிங்களம் காதில் பூ சுற்ற முடியாது.
ReplyDelete