ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி மும்பை ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று குடும்பத்தினர் யோசித்து வந்தனர். “ஏ” என்ற எழுத்தில் துவங்கும் பெயராக இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள்.
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர் யாராய் மூவரின் பெயரும் “ஏ”யில் துவங்குவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களும் பெயர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கலாம் என அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து லட்சக்கணக்கான பெயர்கள் வந்து குவிந்தன. மூன்று மாத தேடலுக்கு பின் அபிலாஷா என்ற பெயரை அபிஷேக்கும் ஐஸ்வர்யாராயும் தேர்வு செய்துள்ளார்கள்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பச்சன் வீட்டுக்கு திரும்பியதும் பெயரை அதிகார பூர்வமாக அறிவிக்கின்றனர். இரண்டு “ஏ” எழுத்துக்கள் சேர்ந்தபடி வரும் பெயர் வைத்தால் அதிர்ஷ்டம் என ஜோதிடர்கள் சிலர் வற்புறுத்தியுள்ளனர். இதனால் “ஆலையா” என்ற பெயரும் பரிசீலனையில் உள்ளது.
No comments:
Post a Comment