நயன்தாரா நடிக்கும் படம் ‘நானும் ரவுடிதான்' . இப்படத்துக்காக மது கடைக்கு சென்று மது வாங்கும் காட்சியில் நடித்தார் நயன்தாரா. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சிக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மது கடையில் ஒரு பெண் மது வாங்குவதுபோல் காட்டுவது பெண்களை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது. குறிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நயன்தாரா கூறும்போது, ‘இது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. அவ்வளவுதான்' என குறிப்பிட்டார். பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘எதற்காக இவ்வளவு பெரிய விஷயமாக இதை மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.
நயன்தாராவை குறிவைத்து இதுபோல் போராட்டம் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காட்சிக்கு ஏற்றபடி இயக்குனர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைத்தான் நடிகர், நடிகைகள் செய்கின்றனர். அதுபோல் இதுவும் ஒரு காட்சி அவ்வளவுதான். இயக்குனர்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது. இக்காட்சி ஏன் இடம்பெறுகிறது என்பதை படம் பார்த்தால் தெரியவரும்‘ என்றார்.
இது பற்றி கருத்து தெரிவித்த நடிகை பிரியா ஆனந்த், ‘சம்பளம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்கிறோம். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் வேலை. சிகரெட் பிடிப்பதுபோல் நடித்தால் உடனே அந்த நடிகை நிஜத்திலும சிகரெட் பிடிப்பார் என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட காட்சி ஏன் படத்தில் இடம்பெறுகிறது என்பது படம் பார்க்கும்போது புரியும்' என்றார்.

No comments:
Post a Comment