Thursday, February 5, 2015

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

5. The Boy Next Door

ஜெனிபர் லோபஸ் நடித்துள்ள இந்த எரோடிக் த்ரில்லர் சென்ற வார இறுதியில் 6.09 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல் 24.68 மில்லியன் டாலர்கள்.

4. Black or White

கெவின் காஸ்ட்னர் நடித்துள்ள இந்த பேமிலி ட்ராமா விமர்சகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 6.46 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. 
3. Project Almanac

இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 8.50 மில்லியன் டாலர்கள்.
2. Paddington

கரடியைப் பற்றிய படம் இது. அனிமல் பிளானெட் வகையறா அல்ல, வேறு மாதிரி. சென்ற வாரம் 8.15 மில்லியன் டாலர்களை வசூலித்த படம் இதுவரை 50.54 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
1. American Sniper

கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் அமெரிக்கன் ஸ்னைப்பர் இந்த வாரமும் அதே முதலிடத்தில். சென்ற வார இறுதியில் இப்படம் 31.85 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 248.94 மில்லியன் டாலர்கள்.





No comments:

Post a Comment