2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சரியான திசையில் பயணிப்பதாக கூறியுள்ளார் இந்த வழக்கு பெரிதாக முக்கியக் காரணகர்த்தாவான சுப்பிரமணியன் சாமி.
ராசா மீது வழக்கு தொடர பிரதமர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறித்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சாமி. பின்னர் பிரதமர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலைத் தொடர்நது அப்படியே மங்கி ஸ்டைல் பல்டி அடித்து பிரதமர் மீது எந்த்த தவறும் இல்லை என்று ஜகா வாங்கினார் சாமி. அன்று முதல் தற்போது பிரதமரை பாராட்டியவண்ணம் இருக்கிறார் சாமி.
அகமதாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்பாக சரியான திசையில் பயணித்து வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். பிரச்சினை குறித்து பிரதமருக்கு தெளிவாக புரிந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அவர் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் சரியானதாக இருக்கிறது. ஜனவரி 15ம் தேதி வரை நான் இதை பொறுத்திருந்து பார்க்கவிருக்கிறேன். அதன் பிறகு இதுகுறித்த மேல் நடவடிக்கை குறித்து யோசிப்பேன் என்றார் சாமி.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரத்தன் டாடாவின் பங்கு குறித்து அவரிடம் கேட்டபோது, ரத்தன் டாடா ஒரு வர்த்தகர். அப்படித்தான் அவர் செயல்பட்டு வருகிறார். அவரை தேவதை போல நினைக்கத் தேவையில்லை.
ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, ஊழல் செய்து பிடிபடுபவர்களை கடுமையாக தண்டிப்பது மட்டுமே. ஒருவரை கடுமையாக தண்டித்தால் அதற்குப் பின்னால் ஊழல் செய்ய நினைப்பவர்களுக்கு அது நல்ல பாடமாக அமையும்,அவர்களுக்கும் பயம் வரும்.
தற்போது ஊழல்வாதிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment