மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலியா இன்று தன் இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 157 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆஷஸ் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளது.
ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரே தொடரில் இரு முறை இன்னிங்ஸ் தோல்வியே கண்டிராத இந்த அணி இன்று இந்தத் தொடரில் 2-வது இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவி வரலாறு படைத்தது.
ஓல்ட் டிராஃபர்ட் மைதானத்தில் 1956ஆம் ஆண்டு பெற்ற வெற்றிக்கு பிறகு இதுவே ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
ஆட்டத்தின் எந்த நேரத்திலும் ஆஸ்ட்ரேலியாவை ஒட்டுமொத்தமாக அடக்கி ஆண்டது இங்கிலாந்து.
169/6 என்று துவங்கிய ஆஸ்ட்ரேலியா வந்தவுடன் மிட்செல் ஜான்சன் (6) விக்கெட்டை டிரெம்லெட் பந்தில் இழந்தது. ஜான்சன் பவுல்டு ஆனார்.
பீட்டர் சிடில் அபாரமாக ஒரு சில ஷாட்களை ஆடி 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து ச்Vஆன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக ஹில்ஃபென் ஹாஸை பிரெஸ்னன் வீழ்த்த 1986- 87 தொடருக்குப் பிறகு இங்கிலாந்து ஆஸ்ட்ரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் 2- 1 என்று முன்னிலை வகித்தது.
பிராட் ஹேடின் 55 ரன்கள் எடுத்து மிகவும் சோகமாக மைதானத்தில் உட்கார்ந்தார். அவர் நாட் அவுட்டாக இருந்தார்.
ஜொனாதன் டிராட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment