ஆளுங்கட்சி டி.வி.,யான கலைஞர் டி.வி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் வாரந்தோறும் விதவிதமான கிளாமர் உடையில் தோன்றி ரசிக மச்சான்ஸை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் நமீதா, கலைஞரின் கதை வசனத்தில் உருவாகியிருக்கும் இளைஞன் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஆளும்கட்சிக்கும், நமீதாவுக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகிக் கொண்டே போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும்கட்சி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நமீதா அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.
ஆம்! ஜெயா டி.வி.,யில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் நமீதாவை ஒப்பந்தம் செய்து விட்டதாம் ஜெயா டி.வி. நடிகை குஷ்பு நடத்தி வந்த இந்த நிகழ்ச்சி, அவர் திமுகவில் இணைந்ததால் நதியா வசம் ஒப்படைக்கப்பட்டது. குஷ்பு நடத்திக் கொண்டிருந்தபோது இருந்த மார்க்கெட்டிங் நிலவரம் நதியா வந்தபின் நங்கூரம் போட்ட மாதிரி அடங்கி விட்டதாம். இந்த நிலையில்தான் ஜெயா டிவி நமீதாவுக்கு வலை விரித்திருக்கிறது. எதிர்பார்த்த சம்பளம் தர ஜெயா நிர்வாகம் தயாராக இருந்ததால் அம்மணியும் டபுள் ஓ.கே. சொல்லி கமிட் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநேகமாக ஜனவரி முதல் ஜெயா டி.வி.,யின் ஜாக்பாட்டை நமீதா நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நமீதாவுக்கு ஜாக்பாட் கிடைத்திருப்பதை கலைஞர் டி.வி., எந்த அளவு ஜீரணித்துக் கொள்ளப் போகிறதோ தெரியவில்லை. அதேநேரம் ஜாக்பாட்டில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டதைப் போல மானாட மயிலாடவில் இருந்து நமீதா நீக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ? ரசிக மச்சான்ஸ் காட்டில் இனி ஜாக்பாட் மழைதான்!
No comments:
Post a Comment