2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவிடம் இன்று காலை 10.45 மணிக்கு விசாரணையைத் தொடங்கிய சிபிஐ கடந்த 7 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் விசாரணை நடத்தி வருகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா, நீரா ராடியா, முன்னாள் டிராய் தலைவர் பிரதீப் பைஜால் உள்ளிட்டோரின் இல்லங்கள், அலுவலகங்கள் சிபிஐ சோதனைக்குள்ளாகின. மேலும், ராசாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் ரெய்டுகள் நடந்தன. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து தற்போது இவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது. ராடியா, பைஜாலிடம் ஏற்கனவே விசாரணை நடந்து விட்டது. இந்த நிலையில் ராசாவிடம் இன்று விசாரணை தொடங்கியது.
இதற்காக அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி இன்று காலை பத்தே முக்கால் மணிக்கு ராசா அஹ்கு வந்தார்.
அதன் பின்னர் அவரிடம் சிபிஐ குழ விசாரணையைத் தொடங்கியது. காலையில் தொடங்கிய விசாரணை இடைவிடாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. மாலை ஆறே கால் மணி நிலவரப்படி, விசாரணை முடிவடையவில்லை. 8 மணி நேரத்திற்கும் மேலாக ராசாவை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் பிரதமரின் அறிவுரையை மீறியது ஏன் என்பது உள்பட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்படுவதாக தெரிகிறது.
No comments:
Post a Comment