‘அலிபாபா’, ‘கற்றது களவு’ படங்களை தொடர்ந்து டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பட்டியல் சேகர் தயாரிக்கும் படம், ‘கழுகு’. ரஜினி நடித்து வெளியான இப்படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதற்கான உரிமையை, தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் இருந்து வாங்கியுள்ளனர். கிருஷ்ணா ஹீரோ. பிந்து மாதவி ஹீரோயின். கருணாஸ், தம்பி ராமய்யா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யசிவா இயக்குகிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் மூணாறில் நடந்தது. கேப் ரோடு பகுதியிலுள்ள செங்குத்தான மலை, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இதுவரை அங்கு யாரும் ஷூட்டிங் நடத்தியது இல்லை. இந்நிலையில், தயாரிப்பாளருக்கு தெரியாமல் இயக்குனர் சத்யசிவா அந்த மலைப்பகுதியில் சில காட்சிகளைப் படமாக்க முடிவு செய்தார். ஒளிப்பதிவாளர் சத்யா, கிருஷ்ணா, உமாஸ்ரீ, இன்னும் சில நடிகர்கள், படப்பிடிப்புக் குழுவை சேர்ந்தவர்கள் என மொத்தம் 60 பேருக்கு மேல், மலையில் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். ஜிம்மி ஜிப் கேமராவும் கொண்டு செல்லப்பட்டது.
மலையில் ஏறுவதற்கு சரியான பாதை கிடையாது. கயிறு கட்டி, தாங்களாகவே பாதையை ஏற்படுத்திக் கொண்டு, காலையில் புறப்பட்ட படப்பிடிப்புக் குழுவினர், மதியம் மலையுச்சியை அடைந்தனர். பிறகு 2 மணிக்கு முதல் காட்சியை இயக்குனர் படமாக்கினார். அப்போது மலைக்கு கீழே வந்த தயாரிப்பாளர், யாருடைய அனுமதியும் பெறாமல் மேலே உள்ள ஆபத்தான பகுதியில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனரின் செயலை அறிந்து கோபம் அடைந்தார். உடனே மூணாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உயிருக்கு ஆபத்தான பகுதியில் ஷூட்டிங் நடத்திய இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படக்குழுவினர் மலையில் இருந்து கீழே இறங்கினர். இதையடுத்து போலீசார், இயக்குனருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
எப்படியாவது காட்சி நன்றாக வந்து, சீக்கிரமாக படத்தை வெளியிட்டால் போதும் என்று நினைக்கும் திரையுலகில் இப்படியும் ஒரு தயாரிப்பாளரா.....? அல்லது இதுவும் ஒரு விளம்பர உத்தியா ?
மலையில் ஏறுவதற்கு சரியான பாதை கிடையாது. கயிறு கட்டி, தாங்களாகவே பாதையை ஏற்படுத்திக் கொண்டு, காலையில் புறப்பட்ட படப்பிடிப்புக் குழுவினர், மதியம் மலையுச்சியை அடைந்தனர். பிறகு 2 மணிக்கு முதல் காட்சியை இயக்குனர் படமாக்கினார். அப்போது மலைக்கு கீழே வந்த தயாரிப்பாளர், யாருடைய அனுமதியும் பெறாமல் மேலே உள்ள ஆபத்தான பகுதியில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனரின் செயலை அறிந்து கோபம் அடைந்தார். உடனே மூணாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உயிருக்கு ஆபத்தான பகுதியில் ஷூட்டிங் நடத்திய இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படக்குழுவினர் மலையில் இருந்து கீழே இறங்கினர். இதையடுத்து போலீசார், இயக்குனருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
எப்படியாவது காட்சி நன்றாக வந்து, சீக்கிரமாக படத்தை வெளியிட்டால் போதும் என்று நினைக்கும் திரையுலகில் இப்படியும் ஒரு தயாரிப்பாளரா.....?
No comments:
Post a Comment